IPL Auction 2025 Live

Coconut Milk Rice: குட்டீஸ்களுக்கு பிடித்த தேங்காய் சாதத்தை சுவையாக செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளுக்கு அசத்தல் டிப்ஸ்.. சமையலில் கலக்குங்கள்..!

இதனுடன் வேர்க்கடலை, முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

Respective: Baby Happy with Coconut Milk Rice

டிசம்பர், 11: ஒரே மாதிரியான காலை உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு தேங்காய் சாதம் (Coconut Milk Rice) என்றால் கொள்ளை பிரியம் இல்லாமலா போய்விடும்?. நல்ல மணமுடன் சுவை கொண்ட உணவாக இருக்கும் தேங்காய் சாதம் பலருக்கும் பிடித்தமான உணவு ஆகும். இதனுடன் வேர்க்கடலை, முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். இன்று அசத்தலான தேங்காய் சத்தம் செய்வது எப்படி என காணலாம். 2024 Parliament Election: ராகுல் காந்தி Vs நரேந்திர மோடி; சூடேறும் அரசியல்களத்தில் மக்கள் ஜாம்பவான் யார்?.! 

தேவையான பொருட்கள்:

அரிசி சத்தம் - 2 கப்,

தேங்காய் துருவல் - 1 கப்,

தேங்காய் பால் - டம்ப்ளர் அளவு,

கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்,

கடலை பருப்பு - 2 ஸ்பூன்,

முந்திரி பருப்பு - 20,

மிளகாய் வற்றல் - 3,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

இஞ்சி - சிறிய அளவு,

கறிவேப்பிலை - சிறிதளவு,

கொத்தமல்லி - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு.

Coconut Milk Rice

செய்முறை:

வாணெலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, முந்திரி, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பில்லை போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து 4 நிமிடம் வதக்க வேண்டும்.

இவை பொன்னிறமாக வந்ததும் துருவிய தேங்காய் மற்றும் உப்பு போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பொன்னிறமாக வதங்கியதும் சாதத்தை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி தேங்காய்ப்பாலை சேர்த்து கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் தேங்காய் சாதம் தயார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 05:16 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).