Karivepillai Powder: ஒரேமுறை தயார் செய்து குழம்பு பிரச்சனையை தவிர்க்க, பேச்சுலர் ஸ்பெசல் கருவேப்பில்லை பொடி தயார் செய்வது எப்படி?..!

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க பேருதவி செய்யும் கறிவேப்பிலையில் பொடி செய்வது குறித்து காணலாம்.

Respective: Karivepillai Podi / Curry Tree Powder

டிசம்பர், 11: நாம் அன்றாடம் தவிர்க்க முடியாமல் அனைத்து விதமான உணவுகளுக்கும் உபயோகம் செய்யும் பொருள் என்றால் அது கறிவேப்பில்லை (Curry tree) தான். உணவை சமைக்கும் போதும், அதனை கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கும் போதும் பலரும் கறிவேப்பிலையை (Karivepillai) சிறிதளவு சேர்த்துக்கொள்வார்கள்.

கறிவேப்பிலையில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இரும்புசத்து, கால்சியம் போன்றவையும் உள்ளன. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க பேருதவி செய்கிறது. இன்று கறிவேப்பிலையில் பொடி செய்வது குறித்து காணலாம். Update Aadhar Address: 2 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்வது எப்படி?… இது ரொம்ப சுலபம்தான்.. வீட்டிலேயே செஞ்சிடலாம்.! 

தேவையான பொருட்கள்:

கறிவேப்பில்லை - 3 கப்,

காய்ந்த மிளகாய் - 8,

மிளகு - 2 ஸ்பூன்,

சீரகம் - 2 ஸ்பூன்,

கடலை பருப்பு - 3 ஸ்பூன்,

உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்,

பெருங்காயம் - 1 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட கறிவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

இவை நன்கு வறுபட்டதும் இயற்கையாக ஆறவைத்த பின்னர், மிக்சியில் அல்லது அம்மி, ஆட்டு உரல் போன்றவற்றில் பொடித்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதனை சூடான சாதத்துடன் ணெய் சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு நல்லது. இவற்றை ஒருமுறை தயாரித்து எடுத்து வைத்துக்கொண்டால் அவசர நேரத்தில் சாதம் வடித்து சாப்பாடை முடித்துவிடலாம். பேச்சுலர்களுக்கு இது பேருதவி செய்யும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 05:06 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif