Health Tips: குளிர்கால சரும நோயால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
உடலுக்கு தேவையான நீரை குடிப்பது மட்டுமல்லாது, சில எளிய வழிமுறைகள் உதவியுடன் பனிக்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யலாம்.
டிசம்பர் 27, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவுபெற்று, குளிர்காலம் தொடங்கவுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான வடமாநிலங்களில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் குளிர்கால நோய்களும் மக்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதில் இருந்து நம்மை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அவசியமாகிறது. குறிப்பாக சுடவைத்து நீரை குடிப்பது, காய்ச்சல், சளி போன்ற லேசான அறிகுறி இருந்தாலும், மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. இன்று குளிர்காலத்தில் சரும ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து காணலாம்.
தேங்காய் எண்ணெய் (Coconut Oil):
குளிர்காலங்களில் சருமங்களில் அரிப்பு ஏற்படுவது இயல்பானது. இதனை சரி செய்ய தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தை இயற்கையாக மென்மையாக்க உதவுகிறது, மேலும் வறண்ட சருமத்துக்கு ஈரப்பதம் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயில் இயற்கையாக பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால், குளிர்காலத்தில் உணர்திறன் சருமம் பாதுகாக்கப்படும். தோல் வகை பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெய் உகந்தது. Health Tips: உச்சகட்ட அலர்ட்... பரவுகிறது இ-கோலி பாதிப்பு.. இந்த அறிகுறி இருக்கா? கவனமாக இருங்க.!
அடிக்கடி ஈரப்பதமாக்குதல்:
உடலில் குளிர்காலத்தில் இயற்கையாக ஏற்படும் நீர்பற்றாக்குறையை கட்டுப்படுத்த, நமது சருமத்தை ஈரமாக்கலாம். நாம் குளித்ததும் நறுமணமில்லாத மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம். இதனால் உடலின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். ஹைளூரோனிக் அமிலம், செராமைட், கிளிசரின் போன்ற பொருட்கள் பயன்படுத்தலாம்.
ஈரப்பதத்தை தரும் விஷயங்கள்:
குளிர்காலத்தில் வீட்டுக்குள் ஈரப்பத தன்மையை அதிகரிக்க, ஈரப்பதமூட்டிகளை (Humidifier) பயன்படுத்தலாம், இதனால் சருமத்தின் வறட்சி தடுக்கப்படும். வீட்டின் அறைகளில் ஈரப்பதமூட்டி இருப்பது, வீட்டின் உட்புற வெப்பத்தை மட்டுமல்லாது, சருமத்தையும் இயற்கையாக பராமரிக்க உதவும்.
கற்றாழை ஜெல் (Aloe Vera Gel):
சருமத்தை குணப்படும் பண்புகளை இயற்கையாக கொண்ட கற்றாழை ஜெல், சரும புண்கள், வீக்கத்தை குணப்படுத்த, அரிப்பை தடுக்க உதவி செய்யும். கற்றாழையில் நிறைந்து காணப்படும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், தோல் சார்ந்த அலர்ஜி பிரச்சனையை சரி செய்யும். அரிப்பில் இருந்து நிவாரணம் தரும். இதைதவிர்த்து உடலுக்கு தேவையான அளவு நீரை குடிப்பது மிகவும் முக்கியமானது. நீரை அதிகம் குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும்.