Postponed Periods Effect: அச்சச்சோ.. மாதவிடாய் நாட்களை தள்ளிப்போட மாத்திரை எடுத்துகிறீங்களா?.. மோசமான பின்விளைவுகள் என்னென்ன?..!
இளவயது பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் என பலரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாதவிடாய் சுழற்சியை நிறுத்த அல்லது தள்ளிப்போட விரும்புகின்றனர்.
டிசம்பர், 11: இன்றளவில் உள்ள பெண்கள் திருமணம், பார்ட்டி, ஊருக்கு செல்ல வேண்டும் என்று பல காரணங்களால் அவர்கள் வெளி இடங்களுக்கு செல்லும் நாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுவிடக்கூடாது (Periods) என்ற எண்ணத்தில் இருந்து வருகின்றனர். இளவயது பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை என பலரிடமும் இவ்வாறான எண்ணம் மேலோங்கி இருக்கிறது. இவர்கள் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிக்கேற்ப மாதவிடாய் சுழற்சியை நிறுத்த அல்லது தள்ளிப்போட விரும்புகின்றனர்.
இயற்கையாக ஏற்படும் மாதவிடாயை தள்ளிப்போட பெண்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் (Periods Postpend Medicine) பல உடல்நல கோளாறுகளுக்கு (Health Issues) வழிவகை செய்கிறது. மேலும், மருத்துவரின் எந்தவித முன் ஆலோசனை அல்லது சிகிச்சை பெறாமலேயே சுயமாக மருந்தகத்தில் மாதவிடாயை தள்ளிப்போட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறான மாத்திரைகள் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம்.
அறியாமை / அலட்சியம் (Ignorance or Negligence): பெண்களிடையே மாதவிடாயை தள்ளிப்போட எடுத்துக்கொள்ளும் மாத்திரை தொடர்பான விபரம் சென்ற அளவு கூட, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பான தகவல்கள் தெரிவது இல்லை. மாதவிடாய் ஈஸ்ட்டிரோஜன் & புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன் சுழற்சியால் 21 நாட்கள் முதல் 28 நாட்களுக்குள் ஏற்படக்கூடியது ஆகும். S.A.ChandraSekar & Rajinikanth: ஓகே சொன்ன ரஜினி.. உற்சாகத்துடன் தயாரான எஸ்.ஏ.சி-க்கு திடீர் பிரச்சனை.. மனம்திறந்து பேசிய எஸ்.ஏ சந்திரசேகர்.!
மாதவிடாய் நாட்களில் 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரையிலும் உதிரப்போக்கு என்பது இருக்கும். இது ஒவ்வொரு பெண்ணை பொறுத்து மாறுபடும். ஒழுங்கற்ற மாதவிடாய், குறைந்த உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வரும் தருணங்களில் உடலின் செயல்பாடுகளை செயற்கையாக தடுப்பது கட்டாயம் அதற்கான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
ஹார்மோன் சுழற்சியில் மாற்றம் (Harmon Changes): பெண்களின் மாதவிடாய் நாட்கள் பெரும்பாலும் கணிக்கக்கூடியவை என்பதால் அதனை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரையால் ஒருவாரம் என்ற அளவில் அதனை தள்ளிப்போட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இவை உடலில் சுரக்கும் இயற்கையான ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் ஹார்மோன் சுரப்பு கட்டுக்குள் வைக்கப்படும். அதன் சுழற்சி முறையும் மாற்றப்படும்.
இதனால் ஹார்மோனை சுரக்க உதவி செய்யும் உறுப்புக்கள் முதலில் பாதிப்பை சந்தித்து, மீண்டும் அதனை இயற்கையாக சுரக்க வைக்க திணறுகிறது. மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பெறுவது நல்லது. ஆனால், இன்றளவில் தோழிகளின் பேச்சை கேட்டு பல பெண்கள் சுயமாக மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்களின் அலட்சிய மனப்பான்மையை உறுதி செய்கிறது.
வீரியம் தீர்ந்ததும் வேதனை (First Happy End Heavy Pain): மருந்து தனது வீரியத்தை வெளிப்படுத்தும் வரை தான் மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும். அதன் வீரியம் தீர்ந்த அடுத்த சில மணிநேரத்திலேயே அதிக வயிறு வலி, பெண்ணுறுப்பில் கூடுதல் வலி போன்றவை ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சி நடைபெறும். மாத்திரை எடுத்துக்கொண்ட பின்னர் ஏற்படும் மாதவிடாய் கூடுதலான அடிவயிறு, இடுப்பு வலி போன்றவற்றை ஏற்படுத்தும். வழக்கமான நாட்களில் ஏற்படும் மாதவிடாய் வலியை விடவும் கடுமையாக இருக்கும்.
மாத்திரை எடுத்துக்கொள்ளவே கூடாதவர்கள் (Do not Take Medicines): அதேபோல, அடிக்கடி மாதவிடாய் சுழற்சியை தள்ளிப்போட மாத்திரை சாப்பிட்டால் நரம்பு கோளாறு, கல்லீரல் வளர்சிதை மாற்றம், நுரையீரல் அடைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை உள்ள பெண்கள் எக்காரணம் கொண்டும் மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவே கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள். Avoid Diabetes: சர்க்கரை வியாதி என்றால் என்ன?.. எதனால் அது ஏற்படுகிறது?.. தவிர்ப்பது எப்படி?.. முழு விபரம் உள்ளே.!
தலைவலி, இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், கட்டாயம் மாத்திரைகளை தவிர்க்க வேண்டும். அதிகளவு உடல் எடை கொண்ட பெண்களுக்கும் மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகள் உடலுக்கு உகந்தது அல்ல. உடலுக்கு ஒத்துழைக்காத மாத்திரையை சாப்பிட்டு மாதவிடாயை தள்ளிப்போட முயற்சித்தால் வயிறு பிரட்டுதல், ஒவ்வாமை போன்றவை ஏற்படும்.
திருமண நாளில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற நிலையில், கட்டாயம் மாதவிடாய் மாத்திரை எடுத்தாகவேண்டும் என்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று, உடல் பரிசோனை செய்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
இயற்கையே நல்லது (Nature Is Good): பெண்களின் கருப்பை என்பது மென்மையானது. கருப்பைக்கு நாம் செய்யும் உதவி நமது பெண்ணுறுப்பு, சிறுநீரகம், மலக்குடல் போன்றவற்றையும் பாதுகாக்கும். ஆனால், இவ்வாறான மாத்திரைகள் கருப்பையின் செயல்பாட்டுக்கு எதிரான செயல்களை செய்து உடல் நலத்தை கேள்விக்குறியாக்கும். மாதவிடாய் சுழற்சி இயற்கையாக நடைபெற்றால் மட்டுமே கருமுட்டை உருவாகும்.
விஷத்தை சாப்பிட வேண்டாமே (Don't Take Poison): மாதவிடாய் சுழற்சியை தள்ளிப்போட மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும். கருவுறுதலில் குறைபாடை ஏற்படுத்தும். மாதவிடாய் சுழற்சி என்பது உடல் உறுப்புகள் ஹார்மோனுடன் தொடர்பு கொண்டது என்பதால் அதன் பணியை நிறுத்தி வைப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு நாம் விலைகொடுத்து பாய்சன் வாங்கி ஊற்றுவதற்கு சமம் என்பதை நினைவில் கொள்ளவும்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 03:22 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)