Margazhi Special Kolangal: மார்கழி மாதம் அதிகாலை கோலம் போடுவது ஏன் தெரியுமா? சிறப்புகள் என்ன? முழு விவரம் உள்ளே..!
மார்கழி மாத கோலங்களும் அதன் சிறப்புகளும் பற்றி இந்த பதிவில் காண்போம்.
டிசம்பர் 17, சென்னை (Festival News): தமிழ் மாதங்களில் மிக முக்கிய மாதமாகவும், மோட்சத்தை தரும் மாதமாகவும், பாவங்கள் அனைத்தும் நீங்கி, இன்பமான வாழ்க்கையை பெறுவதற்கும், இறை வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான மாதங்களில் ஒன்று மார்கழி மாதம் (Margazhi Month). இந்த மாதத்தில் சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம், பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, அனுமனின் திருஅவதார தினம் போன்றவை வருவதால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக கருதப்படுகிறது.
மார்கழி மாதம் 2024:
மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் இறைவனிடம் அவர் திருவடிச் சார்ந்த செயல்பாடுகளிலே மனம் இருக்க வேண்டும். மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதேநேரம் இறைவனிடம் மனம் நெருங்கி இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆண்டாள் இம்மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையைப் பெற்றாள். இந்த மாதத்தில் சில குறிப்பிட்ட பயணங்களை மேற்கொள்வதால் சூரியனின் அருளையும், பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் பெற முடியும். Margazhi Month 2024: மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
மார்கழி மாத கோலங்கள்:
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு சிறப்புகளுடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதில், மார்கழி மாதம் மிக முக்கியமான கடவுளுக்கு உகந்த மாதமாகும். மார்கழி மாதம் கோலத்திற்கு சிறப்பு வாய்ந்ததாகும். எல்லா நாளும், எல்லா மாதங்களும் கோலம் (Margazhi Kolam) போடுவோம். ஆனால், மார்கழி மாதத்தில் கோலம் போடுவது என்றால் தனிச் சிறப்பு.
மார்கழி மாதத்தில் கோலம் போடுவதன் சிறப்புகள்:
- மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து, இடுப்பை வளைத்து, வாசல் தெளித்து கோலம் கோடும்போது உடலில் வெப்பம் கிடைக்கிறது.
- அந்நேரத்தில், நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது. வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடைக்கும். அந்த நேரத்தில் தான் நல்ல காற்று, ஓசோன் வாயு கிடைக்கிறது.
- அக்காலத்தில் அரிசி மாவால் தான் வீட்டின் வாசலில் பலவகை கோலம் போடுவார்கள். கோலங்கள் தீயசக்திகளை வீட்டினும் வருவதை தடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஊருக்கு முன் வாசல் தெளித்து கோலம் போடு, இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் அதிகாலையில் கோலம் போடு என்றெல்லாம் வீட்டுப்பெரியவர்கள் சொல்வதுண்டு.
- கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும். அதோடு மட்டுமில்லாமல் மனதுக்கும் இது உற்சாகம் தரும். இதனால் நினைவாற்றலும் கிடைக்கிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளை சரியாக இணைத்து கோலம் போட முடியும். நம் மனதை பிரதிபலிப்பது தான் கோலம். எனவே, கோலம் மன மகிழ்ச்சியை தரும்.