Pirandai Medicinal Benefits: பிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..? முழு விவரம் உள்ளே..!

எலும்பு முறிவை சரிசெய்யும் பிரண்டையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

Pirandai (Photo Credit: YouTube)

ஜூலை 01, சென்னை (Health Tips): உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் மிகவும் பயனுள்ளதாக பிரண்டை (Veld Grape) உள்ளது. இந்த பிரண்டைக்கு வச்சிரவல்லி என்ற பெயரும் உண்டு. இது ஒரு ஆயுர்வேத மூலிகை, மிக முக்கியமாக எலும்பு முறிவை குணமாக்கும் தன்மை உடையது. மேலும், பசியை தூண்டக்கூடியது ஆகும். இது கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்ற பல்வேறு வலிகளுக்கு நல்ல வலிநிவாரணியாக செயல்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் வைட்டமின் சி, இ, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு (ketosteroids), ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது. இவற்றை பிரண்டை துவையல், பிரண்டை வற்றல் என்று உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். Family Members Hanging Suicide: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..! அதிர்ச்சி சம்பவம்..!

பிரண்டையில் உள்ள மருத்துவப் பயன்கள்:

பிரண்டையை (Pirandai) துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் எலும்பு முறிவை சரிசெய்வதற்கும், எலும்பு தேய்மானம் அடையாமல் இருப்பதற்கும், மூட்டு வலியை சரிசெய்வதற்கும் உதவுகின்றது.

இந்த பிரண்டையை துவையலாக செய்து, அதனுடன் இஞ்சி மற்றும் பசுநெய் சேர்த்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடுவதன் மூலம், செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

உடலில் சேரும் கெட்ட கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலால் ஏற்படும் இதயநோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

பிரண்டையின் தண்டு மற்றும் மிளகு சமஅளவு எடுத்துக்கொண்டு துவையல் போல நன்றாக அரைத்து ஒரு நாளில் இரண்டு வேலை எடுத்துக்கொள்வதன் மூலம் மூச்சுதிணறல் வராமல் பாதுகாக்க முடியும்.

உடல் எடையை குறைக்க, பிரண்டை ஒரு சிறந்த மருந்தாகும். உடல் எடையை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் எல்டிஎல் கொழுப்பையும், ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகின்றது.