Banana Stem Soup Recipe: சத்தான வாழைத்தண்டு சூப் தயார் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

சத்து நிறைந்த வாழைத்தண்டு சூப் எப்படி தயார் செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Banana Stem Soup (Photo Credit: YouTube)

ஜூலை 20, சென்னை (Kitchen Tips): மாலை நேரங்களில் எப்போதும் டீ, காபி குடித்து போர் அடித்திருந்தால், வீட்டில் சுவையான சூப் செய்து குடியுங்கள். அதுவும் வாழைத்தண்டு சூப் (Vazhaithandu Soup) செய்து குடித்தால், அதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும், வாழைத்தண்டில் (Banana Stem) நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே, இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும். இவ்வளவு நற்பயன்களை கொண்ட வாழைத்தண்டு கொண்டு எப்படி சூப் (Banana Stem Soup) செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

நறுக்கிய வாழைத்தண்டு - அரை கப்

பால் - கால் கப்

பூண்டு - 4 பல்

உப்பு - சிறிதளவு

கார்ன்ப்ளவர் - 1 தேக்கரண்டி

மிளகு தூள், வெண்ணெய் - சிறிதளவு

சூப்ஸ்டிக் - சிறிதளவு (பேக்கரியில் கிடைக்கும்)

பிரெட் துண்டுகள் - 2 (சதுரமாக வெட்டி நெய்யில் பொரித்தெடுத்தது)

சர்க்கரை - 1 சிட்டிகை. Young Woman Raped By Physiotherapist: மருத்துவமனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; பிசியோதெரபி தலைமறைவு..!

செய்முறை:

முதலில் வாழைத்தண்டு நறுக்கி தேவையான அளவு உப்பு, அரை கப் நீர், பூண்டு போட்டு குக்கரில் வேகவிட்டு, அரைத்து வடிகட்ட வேண்டும்.

பின், சூடான பாலில் கார்ன்ப்ளவர் கரைத்து சிறிது நீர் சேர்த்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் உருக விட்டு கார்ன்ப்ளவர் கரைசல், நீர், வாழைத்தண்டு சாறு, சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிடவும்.

அடுத்து, சூப் கப்பில் விட்டு மேலே பொரித்த பிரெட் துண்டுகள், சூப்ஸ்டிக் வைத்து பரிமாறவும். இதனை எல்லா காலத்திலும் செய்து குடிக்கலாம். எக்காலத்திற்கும் குறிப்பாக, இரவு வேளையில் சிறந்த பானமாக உள்ளது.