ஜூலை 20, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், கோழிக்கோடு நகர் கடற்கரை பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பிசியோதெரபிஸ்டாக மகேந்திரன் (வயது 32) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 வயது இளம்பெண் ஒருவர் பிசியோதெரபி செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தனி அறையில் பிசியோதெரபி அளிக்கப்பட்டு வந்தது. Three People Dies By Suicide: கடன் தொல்லையால் குடும்ப தகராறு; 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை.. தாய் தூக்குப்போட்டு தற்கொலை..!
அப்போது, அந்த இளம்பெண்ணை பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) மகேந்திரன் பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். இதுகுறித்து, இளம்பெண் கோழிக்கோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையறிந்த மகேந்திரன் மருத்துவமனைக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார். இதன்பின்னர், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது உறுதியானது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மகேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், மகேந்திரனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, துறை சார்ந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.