Countries Affect Climate Change: காலநிலை மாற்றத்தினால் உலகளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் இதுதான்.. அதிர்ச்சியை தரும் பட்டியல்.!
2021ல் ஐரோப்பியாவில் கடும் வெள்ளம், சீனாவில் வெள்ளம், அமெரிக்காவில் குளிர்கால வெப்பநிலை, சூறாவளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
டிசம்பர், 9: உலகளவில் புவி வெப்பமடைதலால் தீவிரமான வானிலை (Unstable Weathers) பிரச்சனைகளை பல நாடுகள் சந்திக்க தொடங்கிவிட்டன. 2021ல் ஐரோப்பியாவில் கடும் வெள்ளம், சீனாவில் வெள்ளம், அமெரிக்காவில் குளிர்கால வெப்பநிலை, சூறாவளி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதில், காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் முதலிடம் பெற்றுள்ளன.
சர்வதேச அரங்கில் வருமானம் கொண்ட நாட்டில் காலநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க பல ஆதாரங்களை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆனால், குறைந்த வருமானத்தை கொண்டுள்ள நாடுகளில் அவ்வாய்ப்பு குறைவு. அந்த வகையில், காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தொடர்பான விபரங்களை இன்று காணலாம்.
ஆப்கானிஸ்தான் (Afghanistan): ஆப்கானிஸ்தான் நாட்டின் வெப்பநிலை 1950 - 2010 க்கு இடைப்பட்ட 60 ஆண்டுகளில் 1.8 டிகிரி அதிகரித்துவிட்டது. இது காலநிலை நெருக்கடி காரணமாக 2050க்குள் மேலும் 1.4 டிகிரி அளவில் உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது. அந்நாட்டின் மழையளவு 40 % குறைந்துவிட்ட நிலையில், வறட்சி தலைவிரித்தாடுகிறது. நீரினை சேமித்து பயன்படுத்த அணைகள் ஏதும் தேவையான அளவு இல்லாதது, அங்குள்ள இயற்கை நிலை போன்ற பல காரணத்தால் ஆப்கானிஸ்தான் பருவநிலை மாற்றத்தை கடுமையாக எதிர்கொள்கிறது.
வங்காளதேசம் (Bangladesh): கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கும் நாடுகளில் பிலிப்பைன்ஸை போல வங்காளதேசமும் நெருக்கடியை சந்திக்கிறது. பல தசாப்தமாக காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவை வங்காளதேசம் அனுபவித்து வருகிறது. ஆய்வுகளின்படி அந்நாடு 185 தீவிர வானிலையை கடந்த 20 ஆண்டுகளுக்குள் சந்தித்து இருக்கிறது. Heart Attack Alert: அச்சச்சோ.. இரவு நேரத்தில் 8 மணிக்கு மேல் சாப்பிடுறீங்களா?.. மாரடைப்பு, பக்கவாத அபாயம்; உஷார் மக்களே..!
சாட் (Africa):
ஆப்ரிக்காவில் உள்ள சாட் நாடு காலநிலை மாற்றத்தின் எஞ்சிய பகுதிகளில் இருக்கிறது. இது காலநிலை மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக அதிகரிக்கும் வெப்பம், வறட்சி போன்றவற்றால் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனைப்போல, அந்நாட்டின் மிகப்பெரிய ஏரியில் இருக்கும் 90 % நீர் முற்றிலும் மறைந்துள்ளது.
ஹைட்டி (Haiti): கடந்த 2019ல் ஹைட்டியின் சுற்றுசூழல் அமைச்சராக ஜோசப் ஜூத் பணியாற்றுகையில், அவர் COP25 கால நெருக்கடியை மறைமுகமாக வன்முறையோடு ஒப்பிட்டு கூறியிருந்தார். மேலும், ஹைட்டியில் நிலவும் மிகப்பெரிய பயங்கரவாதம் காலநிலை மாற்றம். அதனை சமாளிக்க கடினமாக உள்ளது. அந்நாட்டில் இருந்த 98 % காடுகள் இழைக்கப்பட்ட காரணத்தால் வெப்பாயமையாகி மோசமான விளைவுகள் ஏற்பட்டது.
கென்யா (Kenya): குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இருக்கும் கென்யாவில் பருவநிலை மாற்றம் என்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் கென்யாவின் துர்கானா பகுதியில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. வறட்சி, அதனால் ஏற்படும் இழப்பு போன்றவையால் அந்நாடு மிகுந்த துயரத்திற்கு உள்ளாகியுள்ளது.
மலாவி (Malawi): ஜிம்பாவே, மொசாம்பிக், மலாவி நாடுகள் கடந்த 2019ல் இடாய் சூறாவளியின் மையமாக இருந்தது. இடாய் சூறாவளி அந்நாடுகளில் மிகப்பெரிய சேத வரலாற்றை கொண்டது ஆகும். இந்த சூறாவளியில் சிக்கி ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தார்கள். கடந்த 1961க்கு பின் அந்நாட்டின் வரலாற்றில் கணிக்க இயலாத அளவு மழை, வறட்சி போன்றவை இருந்தது.
நைஜர் @ நைஜீரியா (Nigeria): நைஜீரியாவில் 80% மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். இந்நாடு உலகின் பிற நாடுகளை விடவும் 1.5 மடங்கு வெப்பநிலையை எதிர்கொள்கிறது. இங்கு 3 டிகிரி முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர். பசி, தண்ணீர் பற்றாக்குறை, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள் காலநிலை மாற்றத்தால் பேரழிவை சந்திக்கவிருக்கின்றனர்.