Ariyalur Child Murder (Photo Credit: YouTube)

ஏப்ரல் 23, செந்துறை (Ariyalur News): அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்த தம்பதி மதிவண்ணன் (வயது 35) - திவ்யா (வயது 27). இத்தம்பதிக்கு 1 ஆண் குழந்தையும், 1 பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டு அருகே கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி இரவு, எரிக்கப்பட்ட குப்பையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது. ப்ளீஸ் ப்ரோ.. விட்று ப்ரோ.. ஆபாசமாக பேசி சிக்கிய தவெக ஆதரவாளரை தாறுமாறாக பொளந்துகட்டிய பெண்ணின் அண்ணன்மார்கள்..!

பிறந்த குழந்தையை கொன்று எரித்த தம்பதி:

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர். புகாரின்பேரில், செந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திவ்யா கற்பமானதை மறைத்து வயிற்றில் கட்டி உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில், அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்த சந்தேகமடைந்த மதிவண்ணன், குழந்தையை தூக்கி கீழே வீசியுள்ளார். குழந்தை அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்துள்ளார். இதனால், குழந்தை இறந்து விட்டது. அதன்பிறகு, இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு எரித்து (Child Murder) உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

தம்பதி கைது:

இதனையடுத்து, காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து மதிவண்ணன், அவரது மனைவி திவ்யா ஆகியோரை கைது செய்தனர். பின்னர், செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.