Menstruations Pads: மாதவிடாய் நாட்களும் - பெண்கள் பயன்படுத்தும் ரசாயன நாப்கின்களின் கொடூரமும்.. எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்.. அதிர்ச்சியை தரும் நோய்கள்.!

இவற்றால் பல ஆபத்தான உயிர்கொல்லி புற்றுநோய்கள் பெண்களுக்கு ஏற்படும் அபாயம் இருக்கின்றன.

Menstruation Day Sanitary Pads (Photo Credit: Hellodox.com)

ஏப்ரல் 13, (Health Tips): பெண்கள் பருவமான நாட்களில் இருந்து மாதம் சுழற்சி முறையில் மாதவிடாய் (Menstruation) நாட்களை சந்திப்பார்கள். இது அவர்களின் மெனோபாஸ் நிலைக்கு செல்லும் வரை தொடரும். மாதவிடாய் நாட்களை சில பெண்களே எளிதாக கடந்து சென்றிருப்பார்கள். பிறருக்கு அடிவயிற்றில் கடும் வலி, இடுப்பு வலி, குமட்டல், உதிரப்போக்கு அதிகரிப்பு, உடற்சோர்வு போன்றவை இருக்கும்.

அதேபோல எரிச்சல், கோபம், தூக்கமில்லாதது போன்ற மனநல மாற்றங்களும் ஏற்படும். இவ்வாறான காலங்களில் இன்றளவில் பெண்கள் சானிட்டரி நாப்கின்களை (Sanitary Napkin) உபயோகம் செய்து வருகின்றனர். நாப்கின் தயாரிப்பு நிறுவனங்கள் உதிரப்போக்கை உறிஞ்சு, அசௌகரியத்தை தவிர்க்க வேண்டும் என அதிகப்படியான சூப்பர் அப்சார்பேண்ட் பாலிமரை உபயோகம் செய்கின்றனர்.

உதிரப்போக்கு கசிவுகளை தடுக்க பாலி எதிலீன், பாலிப்ரோபேலீன் போன்றவைகளையும் உபயோகம் செய்கின்றனர். இவைகளை குறைந்தளவு உபயோகம் செய்தலே அதிக உடல்நலக்குறைவுகளுக்கு வழிவகை செய்யும். ஆனால், டெல்லியை சேர்ந்த என்.ஜி.ஓ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இயற்கை நாப்கின்கள் என்று கூறப்படும் நாப்கினிலும் வேதிப்பொருட்கள் அதிகளவு இருப்பது உறுதியானது. BBC Case: வெளிநாட்டு நிதி முறைகேடு விவகாரத்தில், பிபிசி மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!

இலியோனிஸ் பல்கலை.,யில் நடைபெற்ற ஆய்வில் குளோரைட், டோலுயீன், சைலின் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பது உறுதியானது. இவ்வாறான வேதிப்பொருட்கள் கலந்த நாப்கினை பெண்கள் உபயோகம் செய்யும்போது, சருமத்தில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஒரு நாப்கினை குறைந்தது 4 மணிநேரம் வரையிலும் அதிகபட்சம் 6 மணிநேரத்திற்கு உள்ளாகவும் மாற்றிவிட வேண்டும்.

சில பெண்கள் அறியாமையிலும், அலட்சியத்தாலும் நாள் முழுவதும் ஒரே நாப்கினை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கிருமித்தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. நாப்கினில் இருக்கும் ரசாயனம் பிறப்புறுப்பு தோலின் வழியே உடலுக்குள் சென்றால் மாதவிடாய், ஹார்மோன் செயல்பாடு மாற்றம், நோயெதிர்ப்பு சக்தி குறைதல், பிறப்புறுப்பு புற்றுநோய், பெண்ணுடலில் ஆண்களுக்கான ஹார்மோன் உற்பத்தி போன்றவை ஏற்படும்.

மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் டையாக்சின் வேதிப்பொருள் ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் 2002ல் நடந்த ஆய்வுகளின்படி டையாக்சின் கருப்பை கட்டிகள், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், குறுகிய மாதவிடாய், சினைப்பை நீர்க்கட்டி, கருவுறுதலில் தாமதம் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. Summer Season Tips: கோடையும் – குழந்தை பராமரிப்பும்… பெற்றோர்களே இந்த அசத்தல் டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க.!

சந்தைகளில் நாப்கின் அறிமுகம் ஆவதற்கு முன்பு பெண்கள் பருத்தியினால் கொண்ட துணிகளை பயன்படுத்தி வந்தனர். சிலர் அதனை துவைத்து உபயோகம் செய்வார்கள். சிலர் அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, மாதம் ஒரு பருத்தி துணி என உபயோகம் செய்வார்கள். அன்றைய நாட்களில் பெண்களிடையே மேற்கூறிய பல நோயகள் வெகு குறைவாகவே ஏற்பட்டன. ஆனால், இன்றளவில் அதன் நிலை மாறிவிட்டது.

நமது உணவுப்பழக்கம் மற்றும் மாறிய வாழ்வியல் முறைகள் காரணமாகவும் உடல், மன ரீதியான பல்வேறு பாதிப்புகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். நமது எதிர்கால சந்ததிகளான குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க துணி நபீக்கின் வாங்குவது நல்லது. இதனை பயன்படுத்திய பின்னர் சூடான நீரில் துவைத்து, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து மீண்டும் உபயோகம் செய்யலாம்.

இன்றளவில் மூலிகை நாப்கின்களும் தயார் செய்யப்படுகின்றன. மூலிகை நாப்கினில் பருத்தி, திரிபலா சூரணம், கற்றாழை, வேப்பிலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை நமது உடலுக்கு எந்த அசௌகரியத்தையும் தராது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எளிதில் அணுகும் வகையில் இரசாயன நாப்கின்கள் இருந்தாலும், குறைந்தபட்சம் வீட்டில் இருக்கும் பெண்களாவது மூலிகை நாப்கினை பயன்படுத்தலாம். CSK Vs RR: பந்துவீச்சில் சொதப்பிய சென்னை அணி வீரர்கள்; வைடு பந்துகளுக்காக 10 ரன்கள் கூட்டிகொடுத்த பரிதாபம்.!

நாப்கினில் எவ்வகை கொண்டு இருப்பினும் அதனை 4 மணிநேரம் முதல் 6 மணிநேரம் வரை மட்டுமே உபயோகம் செய்ய வேண்டும். இரசாயன பொருட்கள் இன்றி தயாரிக்கப்படும் நாப்கினால் கருப்பை புற்றுநோய், மாதவிடாய் கோளாறு, ஹார்மோன் பிரச்சனை போன்றவை ஏற்படாது. இவைகுறித்த விழிப்புணர்வை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்படுத்த தொடங்குவதே சிறந்தது. அதேபோல, ரசாயன நாப்கின்கள் மண்ணுக்கும், காற்றுக்கும் கேடு விளைவிக்கிறது.