Protect your Eyes: கண்களின் பார்வை மேம்பட, கண்கோளாறுகள் சரியாக கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிடுங்க.!
இதனால் நமது கண்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.
டிசம்பர், 22: இன்றளவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக கணினி (Work With Computer) முன்பு பலமணிநேரம் அமர்ந்து பணியாற்றி வருகிறோம். இதனால் நமது கண்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். அவ்வாறு நாம் கண்களை பாதுகாக்காமல் விட்டால் எதிர்காலத்தில் கண்பார்வை (Eye Problem) விரைந்து குறையும் சூழ்நிலை ஏற்படலாம். இன்று கண்களின் ஆரோக்கியத்தை (Protection of Eyes) அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.
1. வைல்ட் ரோஜா டீ: பூக்கடைகளில் வைலட் ரோஸ் நிறத்தில் விற்பனை செய்யப்படும் ரோஜாவை டீபோல நீரில் கொதிக்க வைத்து குடித்தால் கண்கள் சுருங்கி விரிவடைய தேவைப்படும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, பி1, பி2 மற்றும் இரும்புசத்து, மக்னீஸ், சோடியம், கால்சியம் சத்துக்களை கொண்டுள்ளது. அதனால் வைலட் ரோஜா டீ குடிக்கலாம்.
2. கொத்தமல்லி இலைகள்: நமது கண்களில் விழும் தூசுகளினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க கொத்தமல்லி இலைகளில் உள்ள வைட்டமின் சி, பி, ஏ, ஈ, இரும்புசத்து, ஜின்க் போன்றவை உதவுகின்றன. இவை உள்ள கொத்தமல்லியை சட்னியாக செய்து சாப்பிடலாம்.
3. கேரட்: கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் போன்றவை கண்பார்வை சீர்பட உதவி செய்யும். Anemia: இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவது எதனால்?.. காரணங்கள் என்ன?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!
4. ப்ரோக்கோலி: நமது கண்களில் படும் அதிகளவிலான வெளிச்சத்தால் கண்களில் அழுத்த ஏற்படும். இதனால் பார்வைக்கோளாறு ஏற்படும். இதனை குறைக்க ப்ரோக்கோலி சாப்பிடலாம். இதனுள் வைட்டமின் பி, லூடின், ஜீன்தெக்சின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரைந்து காணப்படுகிறது.
5. மீன்: மீன்களில் கண்பார்வையை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளதால், அவற்றை விரும்பி சாப்பிடலாம். இதனால் வயதான பின்னர் ஏற்படும் பார்வைக்குறைபாடுகள் சரியாகும். இளம் வயதினருக்கு கண்பார்வை மேம்படும்.
சில ஆலோசனைகள்: காலை நேரம் எழுந்தது கண்களில் நீரை தெளித்து 4 முறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல், வாகனங்களில் வெளியே சென்று வந்தால் முதலில் கண்களை சுத்தம் செய்து பிற வேலைகளை கவனிக்கலாம். இதனால் கண்களில் இருக்கும் தூசுகள் வெளியேறும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை தேடி சாப்பிட வேண்டும். கணினி முன் வேலையில் இருப்போர் 45 நிமிட வேலைக்கு பின்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.
Note: உங்களது கண்களில் ஏதேனும் எரிச்சல், அலர்ஜி போன்றவை இருந்தால் வீட்டில் சுய மருந்தை எடுத்துக்கொள்ளாமல், மருத்துவரை சந்தித்து சோதனை செய்து அவரின் ஆலோசனை பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.