Red Color Urine Reason: பீட்ரூட் சாப்பிட்ட பின் சிவந்த நிறத்தில் மலம் & சிறுநீர் வெளியேறுகிறதா?.. காரணம் என்ன?..!
உடனடியாக இவ்வாறான விஷயங்களுக்கு மருத்துவரை நாடுவது நல்லது.
ஜனவரி 27, சென்னை (Chennai): நமது உடலில் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்வதற்கும், ரத்தக்குழாய்களில் இருக்கும் கேடான கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பீட்ரூட் பெரும் உதவி செய்கிறது. அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் பீட்ரூட், இந்திய சமையலில் முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிலருக்கு பீட்ரூட் சாப்பிட்ட பின்னர் வெளியேறும் சிறுநீர் மற்றும் மலம் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் வெளியேறும்.
14% பேருக்கு ஏற்படும் பாதிப்பு: இதனை மருத்துவ நிலையில் பீட்ரூட்டியா என்று அழைக்கிறார்கள். இது பெரிய அளவிலான ஆபத்து இல்லை எனினும், அனைவருக்கும் இது ஏற்படுவதில்லை. பீட்ரூட் சாப்பிடும் 14 விழுக்காடு நபர்களுக்கு இவ்வாறான பிரச்சனையை ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சனை தொடர்ந்து ஏற்படின் நாம் கட்டாயம் மருத்துவரை ஆலோசனை செய்து கொள்வதும் நல்லது. பீட்ரூட்டில் இருக்கும் பீட்டானின் மூலப்பொருள், இரத்த சிவப்பு நிறத்தை வழங்குகிறது. சில சமயத்தில் உணவு செரிமானத்தின்போது பீட்டானின் சரிவர செரிமானத்திற்கு உட்படாத பட்சத்தில், அவை குடலில் எஞ்சி இருக்கும் போது சிறுநீர் மற்றும் மலம் வெளியேறும் போது இவ்வாறான நிறத்தில் வெளியேறுகிறது. IND Vs ENG Test: முதல் டெஸ்ட் தொடரில் விளாசியெடுக்கும் இந்தியா: இங்கிலாந்தின் ரன்களை கடந்து முன்னிலை; விபரம் இதோ.!
இரும்புசத்து குறைபாடு: பீட்ரூட் சாப்பிடும் சமயத்தில் தொடர்ந்து சிறுநீர் மற்றும் மலம் சிவந்த நிறத்தில் வெளியேறும் பட்சத்தில், அது இரும்பு சத்து குறைபாடு உள்ளதையும் உணர்த்துகிறது என்று பொருள். உடலில் இரும்பு சத்து குறைபாடு இருந்தால், திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்படுவது தடைபடும். இந்த சமயத்தில் நிறமிகளை உடல் உறிஞ்சும் திறன் பாதிக்கப்பட்டு இவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன. அதீத உடல் சோர்வு, கண் இமைகள் மற்றும் பற்கள்-எளிர்களின் நிறம் வெளிறிப்போதல், மூச்சுத்திணறல், தலைவலி, மயக்கம், வறட்சி போன்றவை இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகளாக கணிக்கப்பட்டுள்ளன. ஒருமுறை நாம் பீட்ரூட் சாப்பிடும் போது மலம் மற்றும் சிறுநீர் சிவந்த நிறத்தில் வெளியேறினால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அதே விஷயம் தொடர்ந்தால் கட்டாயம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.