Miss Charm India 2024: இந்தியாவின் வசீகரப் பெண் யார் தெரியுமா..? விவரம் உள்ளே..!
புனேயைச் சேர்ந்த 22 வயது சட்டக்கல்லூரி மாணவி 2024-ஆம் ஆண்டுக்கான இந்திய வசீகரப் பட்டத்தை வென்றுள்ளார்.
நவம்பர் 21, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், புனேயை சேர்ந்தவர் சிவாங்கி தேசாய் (வயது 22). தற்போது, புனேயில் உள்ள இந்திய சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாடலிங்கில் ஆர்வமுள்ள இவர் இந்திய வசீகரப் (Miss Charm India 2024) போட்டியில் கலந்துகொண்டார். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான இந்திய வசீகரப் பெண் விருதை அவர் பெற்றார். Sobhita Dhulipala & Naga Chaitanya: கோவா திரைப்பட விழாவில் நாகர்ஜுனா குடும்பத்துடன் நடிகை சோபிதா.. விரைவில் திருமணம்?..
அவரது தந்தை இந்திய கடற்படை அதிகாரியாக உள்ளார். அவரது தயார் மருத்துவர் ஆவார். சிவாங்கிக்கு (Shivangi Desai) சிறு வயதிலேயே மாடலிங் (Modelling) மீது ஆர்வம் இருந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஆர்எஸ்ஐ ராணுவ அமைப்பின் ‘மே குயின்’ பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது, அவருக்கு வயது 16 ஆகும். அதன் பிறகு பல்வேறு அழகிப் போட்டிகளில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், 2024-ஆம் ஆண்டுக்கான இந்திய வசீகரப் பெண் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அரங்கில், வசீகரப் போட்டியில் சிவாங்கி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். அவர் மாடலிங்கில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே தொடர்ந்து சட்டப் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பேஷன், விளையாட்டு, பொழுதுபோக்கு துறை வழக்கறிஞராக ஆக வேண்டும் என்பதை அவர் இலக்காகக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.