Health Tips: வாழைப்பழத்தை சாப்பிடும்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?.. அலட்சியமாக இருக்காதீர்கள்..!
வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை நமது உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும்.
டிசம்பர், 8: வாழைப்பழத்தினை ( Benefits of Banana) சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்றாலும், காலையில் எழுந்தவுடன் வெறுமையான வயிற்றில் எடுத்துக்கொள்வது நல்லது கிடையாது. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை நமது உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும்.
அமிலத்தால் பாதிப்பு: இதன் அமிலத்தன்மை குடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும். இதனால் சர்க்கரை மற்றும் அமிலத்தன்மை இணைந்து குடலுக்கு அசௌகரிய சூழலை ஏற்படுத்தும். இதனால் காலை நேரத்தில் வாழைப்பழம் உகந்ததல்ல.
இப்படி சாப்பிடலாம்: வாழைப்பழத்தினை ஆப்பிள் போன்ற பிற பழங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வாழையில் இயற்கையாக நிறைந்துள்ள பொட்டாசியம், அமிலங்கள் போன்றவற்றால் பிற கனிகளில் உள்ள அமிலத்தை கட்டுப்படுத்தும், அதன் வீரியத்தை குறைக்கும். Postponed Periods Effect: அச்சச்சோ.. மாதவிடாய் நாட்களை தள்ளிப்போட மாத்திரை எடுத்துகிறீங்களா?.. மோசமான பின்விளைவுகள் என்னென்ன?..!
வெறும் வயிறோடு வேண்டாம்: வெறுமையான வயிற்றில் வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் மக்னீஷியம் உடலின் இரத்தத்தில் கலக்கும். இதனால் இரத்தத்தில் இருக்கும் மக்னீஷியத்தின் அளவு அதிகரிக்கும். இதன் தாக்கமானது இதயத்தின் ஆரோக்கியத்தில் எதிரொலித்து, இதய ஆரோக்கியம் என்பது வெகுவாக மாறுபடும். ஆயுர்வேத குறிப்புகளின் படி வெறும் வயிறில் வாழைப்பழம் உட்பட எப்பழத்தையும் சாப்பிடுதல் என்பது கூடாது.
ரசாயனம்: பழங்களை விளைவிக்க இன்றளவில் ரசாயனங்கள் உபயோகம் செய்யப்படுகின்றன. இவற்றில் இருக்கும் ரசாயனத்தால் உடலில் நோய்தொற்று ஏற்படும். பழங்களை சரியான நேரத்தில், அளவில் சாப்பிடுவதே ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கிடைக்க வழிவகை செய்யும்.
அதேபோல, வாழைப்பழத்தின் தோலில் உள்ள சதையை சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறானவர்கள் வாழைப்பழத்தை கழுவிவிட்டு உரித்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் வெளிப்புறமாக வாழைப்பழம் பழுக்க / கிருமிகள் நீங்க ரசாயனங்கள் அல்லது மருந்துகள் அடிக்கப்பட்டு இருக்கலாம்.