Thai Amavasai 2025: நாளை தை அமாவாசை 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மறந்துடாதீங்க.. விபரம் உள்ளே.!
முன்னோர்களின் ஆசியை பெற முக்கிய அமாவாசையாக கருதப்படும் தை திதி அமாவாசை நாளை சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுபவர்கள், வாழ்வில் முன்னேற்றம் காண முயற்சிக்கும் ஆன்மீக சொந்தங்களை லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது.
ஜனவரி 28, சென்னை (Spiritual News Tamil): தமிழக ஆன்மீக பக்தர்கள், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க முக்கிய நாளாக கருதப்படும் தை மாதத்தின் அமாவாசை திதி, தை அமாவாசை அன்று முன்னோரை வணங்கி தர்ப்பணம் கொடுப்பார்கள். அமாவாசையில், தை அமாவாசை முக்கிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோரை நினைவுகூர்ந்து, அவர்களின் ஆன்மா சாந்தியடையும் நோக்கத்துடன் கொடுக்கப்படும் தர்ப்பணம், பல எதிர்கால சந்ததிக்கு நல்வழிப்படுத்தும் விஷயமாகவும் அமைகிறது. அதேபோல, பித்ரு எனப்படும் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகியவர்கள், தை மாத அமாவாசை தினத்தில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுப்பது, வருத்தத்தில் இருக்கும் முன்னோரின் ஆசியை பெற உதவும் எனவும் நம்பப்படுகிறது.
முன்னோர்களின் ஆசியை பெறுங்கள்:
பித்ரு சாபத்தின் காரணமாக அவதிப்படும் நபர்கள், சிறந்த எதிர்காலம் அமையாமல், சுபகாரியம் கைகூட வழியில்லாமல் தவிப்பார்கள். பல தடைகளும் அவர்களின் வாழ்வில் உண்டாகும். அந்த தடைகளை அகற்றும் தன்மை தை அமாவாசைக்கு உண்டு என்பது ஆன்மீக நபர்களின் நம்பிக்கை. நமது வாழ்வில் நாம் செய்யும் நல்-தீ வினைகளை பொறுத்து, கர்மபலன் என்பது நமக்கும், நமது சந்ததிகளுக்கும் நிர்ணயம் செய்யப்படும். ஒருசில காரணங்களால் நாம் நமது முன்னோர்களை மறுக்கும்போது, அவர்கள் நம் மீது கோபம் அடைவார்கள். அவர்கள் தொடர்ந்து கோபத்துடன், வருத்தத்துடன் இருந்தால் சந்ததியில் முன்னேற்றம் இருக்காது. அவர்களின் கோபத்தை தணிக்கவும், தணிந்த கோபத்துடன் அவர்கள் நல்லாசி வழங்குவதால் வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். இதனால் தை அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது. அன்றய நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். இதனால் திருமண தடை அகலும், குழந்தை பிறப்பு கைகூடும், கர்மவினை சரியாகும். குடும்பம் முன்னேறும், செல்வம் பெருகும்.
தை அமாவாசை தர்ப்பணத்திற்கு உகந்த இடங்கள்:
அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி வழங்காமல் இருந்தால், அதனால் பித்ரு தோஷம் உண்டாகும். மாதா-மாதம் அமாவாசையில் தர்ப்பணம் (Thai Amavasai Tharpanam) கொடுக்க இயலாதவர்கள், தை அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது நல்லது. இந்த நாளில் ராமேஸ்வரம், திருச்சி காவேரி ஆற்றங்கரை, திருச்செந்தூர், பவானி ஆகிய இடங்களில் முன்னோருக்கு திதி (Thai Amavasai Thithi) கொடுக்கலாம். வெளியூர் செல்ல இயலாதவர் வீட்டிலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
2025 ம் ஆண்டுக்கான தை அமாவாசை (Thai Amavasai 2025)
2025ஆம் ஆண்டின் முதல் அமாவாசை தை அமாவாசை, ஜனவரி 29, 2025 புதன்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. ஜனவரி 28, 2025 அன்று இரவு 08.10 மணிக்கு தொடங்கும் அமாவாசை திதி ஜனவரி 29, 2025 இரவு 07.21 மணி வரை நீடிக்கிறது.
தை அமாவாசை அன்று நீங்கள் உங்களின் வாட்சப், பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் மூலமாக கருத்துக்களை பகிர லேட்டஸ்ட்லி தமிழ் தனது பதிப்புகளை வழங்குகிறது. இதனை நீங்கள் உங்களின் நண்பர்களுக்கும் பகிரலாம்.
1. அனைவருக்கும் தை அமாவாசை வாழ்த்துக்கள்!
2. ஆன்மீக நண்பர்களுக்கு தை அமாவாசை வாழ்த்துக்கள்!
3. உங்களுக்கும், உங்களின் குடுமப்த்திற்கும் தை அமாவாசை வாழ்த்துக்கள்!
4. முன்னோர்களின் அருளாசியை பெற தை அமாவாசை நாளை சிறப்பிப்போம்!
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)