Harmful Microplastics In Human Testicle: தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்; மனித விந்தணுக்களில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பல வகையான மைக்ரோபிளாஸ்டிக்ஸ், மனித விந்தணுக்களில் இருப்பது தெரியவந்துள்ளது.
மே 22, சென்னை (Health Tips): நியூ மெக்சிகோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், ஆண்களின் கருவுறுதல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய 12 வகையான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் (Microplastics), மனித விந்தணுக்களில் (Human Sperm)இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது வீக்கம், பிஸ்பெனால் ஏ, நாளமில்லாச் சுரப்பி சீர்குலைவுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளது போன்ற அபாயங்களை இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இவை பெரிய அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளின் சிதைவிலிருந்தும் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் உள்ள மைக்ரோபீட்ஸ் போன்ற சிறிய துகள்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழலில் பரவி, கடல்கள், ஆறுகள் மற்றும் மண்ணை மாசுபடுத்துகின்றது. மேலும், நுண்ணிய பிளாஸ்டிக்ககளை கடல்வாழ் உயிரினங்கள் உட்கொள்வதால், உணவுச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படுகிறது. இது மனித ஆரோக்கியத்தை பாதிக்கின்றது. Brother Raped His Sister: 14 வயது சிறுமி கர்ப்பம்; உடன் பிறந்த சகோதரன் வெறிச்செயல்..!
மனித உடலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்:
மனித உடலில் பல்வேறு பாதைகள் மூலமாக நுண்ணுயிர் பிளாஸ்டிக்குகள் நுழைகின்றது. இதில், முதன்மையாக அசுத்தமான உணவு மற்றும் நீர் ஆகியனவாகும். அடுத்து சில முக்கியமாக கடல் உணவுகள், உப்பு, பாட்டில் தண்ணீர், சில பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் மாசுபட்ட சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்படுகிறது. மீனை நாம் உட்கொள்வதன் மூலமாக நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் நிறைந்துள்ளது. ஒருமுறை இதனை உள்ளிழுப்பதனால், நுண்ணிய பிளாஸ்டிக்குகள் குவிந்துவிடும். மேலும், இரைப்பை குடல்பாதை மற்றும் நுரையீரல் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இந்த ஆய்வில், மிக முக்கியமாக பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படக்கூடிய பாலிஎத்திலீன், மைக்ரோபிளாஸ்டிக் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்:
இவை சிறிய பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்ளுதல் மற்றும் உள்ளிழுத்தல் மூலம் மனித உடலில் நுழைய முடிகிறது. இந்த துகள்கள் உடல் உறுப்புகளில் நிறைந்து, வீக்கம் மற்றும் செல்லுலார் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், எண்டோகிரைன் செயல்பாடுகளை சீர்குலைத்து, ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று இந்த ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. அவை பிஸ்பெனால் ஏ மற்றும் பித்தலேட்டுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை கொண்டுள்ளதால், இவை புற்றுநோய்கள், இனப்பெருக்க பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி சிக்கல்களுடன் தொடர்பில் உள்ளது. மேலும், குடல் நுண்ணுயிரிகளுக்கு இடையூறு விளைவித்து, பலவீனமடையச் செய்யும். செரிமான கோளாறு மற்றும் நோயெதிர்ப்பு சக்தி பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. கார்டியோவாஸ்குலர் நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்றவை பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறது.