Thiruvadhirai 2025: திருவாதிரை 2025 தேதி.., நல்லநேரம் எப்போது? முழு விபரம் இதோ.!
அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.
டிசம்பர் 18, சிதம்பரம் (Festival News): தமிழ் நாள்கட்டியின்படி மார்கழி மாதத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரம், அதன் தொடக்கத்தையும் - முடிவையும் அம்மாதத்திலேயே கொண்டு இருக்கும். திருவாதிரை நாள் நடராஜருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திருவாரூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் திருவாதிரை சிறப்புடன் நடைபெறும். அந்நாளில் தியாகராஜ சுவாமி பாத தரிசனம் காண்பிக்கப்படும். தில்லை நடராஜரின் தேர் வீதி உலா வைபவமும் நடைபெறும். திருவாதிரை நோன்பு திருவாதிரை நட்சத்திரத்துடன் நிறைமதி நாளில் உபவாசம் இருந்து மேற்கொள்ளும் விரதம் ஆகும். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு இறைவழிபாடு செய்வார்கள் என்பதால், இதனை திருவாதிரை விரதம் என அழைப்பார்கள்.
தேவர்களும் இறங்கி வரும் நடராஜர் திருதத்தலம்:
சிவனுக்கு உரிய நட்சத்திரமான திருவாதிரை (Thiruvathira) விரதம், சிவனுக்கு மிகவும் உகந்தது ஆகும். இதனாலேயே சிவனை ஆதிரையின் முதல்வன், ஆதிரையான் எனவும் அழைப்பர். மார்கழியில் தில்லை சிதம்பரம், ஆரூர் கோவிலில் நடராஜ பெருமான், தியாகராஜ பெருமான் ஆகியோரை தரிசனம் செய்ய தேவர்களும் இறங்கி வருவார்கள் என்பது ஐதீகம். புராணங்களின்படி, தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலை என்பதால், இக்காலத்தில் வைகறையில் தரிசனம் செய்வது உத்தமம். இதனையே பிரம்ம முகூர்த்தம் என வழங்குவர்.
பஞ்சபூதத்தில் முக்கிய திருத்தலம்:
மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரம், திருவாரூர் நடராஜர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளுடன் தரிசனம் நடைபெறும். அன்று தியாகராஜ சுவாமி வடபாத தரிசனமும் காண்பிக்கப்படும். தில்லை நடராஜர் தேரில் வீதி உலா வருவார். ஆருத்ரா தரிசனத்தை கண்டுரசிக்க பலரும் வருவார்கள். பஞ்ச பூதங்களில் பூமியின் ஸ்தலமாக இருக்கும் சிதம்பரத்தில், நடராஜரின் தரிசனத்தை பெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவெம்பாவை விரதம், விநாயகர் சஷ்டி விரதத்தால் நன்மை கிடைக்கும். Astrology: 2025 ஆம் ஆண்டு திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு (Thiruvadhirai Nakshatra) எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
புராணம் சொல்வது:
அதாவது, தாருகா வனத்தில் வசித்து வந்த முனிவர்கள், சிவனை நிதித்து வேள்வி ஏற்படுத்தினார். சிவன் பிச்சைக்காரனைப்போல வேடமிட்டு, முனிவர்களின் இல்லத்திற்கு சென்று இருக்கிறார். முனிவர்கள் தம்மை மறந்து சிவபெருமான் செல்லலாயினதால், வெகுண்டெழுந்த முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயக்கன், உடுக்கை, மான் தீப்பிழம்பை தோற்றுவித்து சிவன்மீது ஏவினர். சிவன் மதயானையை கொன்று, அதன் தோலை அணிந்துகொண்டார். பிறரை தானே தரித்துக்கொண்டு, முயலகனின் வலது தோலின் மீது காலை ஊன்றி, இடதுகாலை தூக்கி நடனமாடி உண்மையை உணர்த்தி இருந்தார். இதுவே ஆருத்ரா தரிசனம் ஆனது. மார்கழியில் திருவாதிரை இறுதி நாளில், பத்து திங்கள் வெண்பா விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
பழமொழி நியாபகம் இருக்கா?
பெரும்பாலான சிவாலயத்தில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்திருவிழாவும் நடைபெறும். இந்த அதிகாலை நேரத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, பத்தாம் நாள் சூரிய உதயத்தின்போது தரிசனம் நடைபெறும். திருவெம்பாவை விரதத்தன்று, உளுந்து மாவில் காளி நெய்வேத்தியம் வைத்து படைக்கலாம். "திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி" என தென்தமிழக பழமொழி சொல்வழக்கில் உண்டு.
திருவாதிரை 2025 (Thiruvathirai 2025 Date Time):
திருவாதிரை ஆருத்ரா தரிசனம் 2025 ஜனவரி மாதம் 13ம் தேதி அன்று சிறப்பிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 11:24 மணிமுதல் ஜனவரி 13, காலை 10:38 வரை நீடிக்கிறது. பௌர்ணமி நாளில் திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் விரதம் இருப்போர் காலை 06:30 மணிமுதல் 07:30 மணிவரை நல்ல நேரமாகவும் கவனிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் நடராஜருக்கு விரதம் இருந்து வழிபாடுகளை நடத்தலாம். நடராஜர் ஆலயங்களில் நடக்கும் சிறப்பு பூஜையிலும் கலந்துகொள்ளலாம்.