Health Tips: கணினி முன்பு தினமும் வேலை செய்பவரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
அலுவலகத்தில் இருந்து மட்டுமே பணியாற்றி வந்த பலரும், வீடுகளில் இருந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர்.
டிசம்பர், 11: தொழில்நுட்ப யுகத்தில் எந்த வேலைக்கும் கணினி (Computer) என்பது முக்கியமாகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து மட்டுமே பணியாற்றி வந்த பலரும், வீடுகளில் இருந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர். கணினியே தங்களின் வாழ்வாதாரம் என்று இருப்பவர்கள், தங்களின் உடல் நலத்திலும் (Health) அக்கறை எடுக்க வேண்டும்.
ஏனெனில் பிற உடல் உழைப்பாளர்கள் அங்கும் இங்கும் என ஓடிக்கொண்டு பணிகளை கவனிப்பதால், அவர்களுக்கு கணினி முன் இருந்து பணியாற்றுவோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் உருவாகுவது இல்லை.
கணினியை அதிக நேர்மை பார்ப்பவர்கள் முதலில் தங்களின் கண்களின் மீது கவனம் செலுத்துதல் அவசியம். கணினிக்கு அருகில் இருந்து அதனை உபயோகம் செய்யாமல், குறைந்தபட்சம் ஒரு கையளவு தூரத்திலாவது அமர்ந்து பணியை செய்ய வேண்டும்.
கணினியின் திரையில் இருந்து வரும் வெளிச்சத்தால் கண்கள் (Eyes) பாதிக்கப்படுவதை குறைக்க 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும். அலுவலகத்தில் வேலை பார்த்தால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை உள்ளங்கையை கண்களின் மேல் ஒரு நிமிடம் வைத்து ஓய்வை கொடுக்கலாம். RawSproutedCrops: அச்சச்சோ.. முளைகட்டிய பயிரை பச்சையாக சாப்பிட்டால் பேராபத்து.. எச்சரிக்கையாக இருங்கள்.!
உட்கார்ந்தே கணினியின் முன் வேலை செய்பவர்கள் 10 நிமிடத்திற்கு ஒருமுறை தங்களின் கை-கால்களை ஆட்டி, உடலுக்கு அசைவு கொடுத்து மேற்படி வேலை செய்யலாம். அதேபோல், நேர்கோட்டில் அமர்ந்து கணினி முன் வேலை செய்வது முதுகுத்தண்டு நேர்கோட்டில் இருப்பதை உறுதி செய்யும். உடல் வலி ஏற்படும் பிரச்சனை குறையும்.
உங்களின் பாதங்கள் தரையின் மீது சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் உடலின் ஒட்டுமொத்த பலம் பாதத்தில் இருப்பதால், அதனை சமநிலையில் வைக்க வேண்டும். கணினி முன் தட்டச்சு பணிகளை செய்யும் சமயத்தில் முழங்கை இடையின் அருகே இருப்பது நலம். இதனால் தோள்பட்டை வலி குறையும்.
கணினியின் திரையில் வைக்கப்படும் வெளிச்சத்தின் அளவு குறைந்தளவு உள்ளதா? என்பதை சோதிப்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் அது நமது கண்களை பாதுகாக்க உதவி செய்யும். கணினி முன் பணியாற்றுபவர்கள் கட்டாயம் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.