Water Before Sleeping: இரவில் உறங்கச்செல்லும் முன் தண்ணீர் குடிக்கலாமா?.. எது நல்லது?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
நல்ல உறக்கத்தின் போது சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேர்ந்தால், அவர்கள் உறங்க செல்லும் முன்னர் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது நிபுணர்களின் கூற்று.
ஏப்ரல் 30, (Health Tips): இரவு (Night) நேரத்தில் உறங்க செல்வதற்கு முன்னதாக தொலைக்காட்சி (Television), தொடுதிரை அலைபேசி (Smarphone) போன்ற தொழில்நுட்ப சாதனங்களை (Digital Equipments) உபயோகம் செய்வது, குழம்பி (Coffee) போன்றவை பருகுவது உறக்கத்தினை பாதிக்கும். அதேபோல், உறங்குவதற்கு (Sleeping) முன் திரவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உறக்கத்திற்கு முன்பு நீர் அருந்தலாமா? தாகம் ஏற்பட்டால் நீர் (Drink Water Before Sleeping) அருந்தித்தானே ஆக வேண்டும்? அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது. சிலர் உறக்கத்திற்கு முன்பு நீர் அருந்துதலை நன்மை என்றும் கூறுகிறார்கள். சிலருக்கு அவை பாதகமாக அமைகிறது.
நிபுணர்களுடைய அறிவுரைப்படி உறங்குவதற்கு முன்பு நீர் குடித்தல் உடல் வெப்பநிலையினை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். இரவு நேரத்தில் நீரிழப்பு ஏற்படும் பட்சத்தில், நமது உடல் வெப்பமான அல்லது குளிரான நிலையில் இருக்கும். இதனால் உறங்கும் முன் எடுத்துக்கொள்ளப்படும் நீர் உடல் வெப்பநிலையை சீராக்க உதவும்.
நமது உடலில் போதுமான அளவு நீர்சத்து இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். உடலில் நீர்சத்து குறையும் பட்சத்தில் மனநிலையை அவை பாதிக்கும். உறக்கத்தின் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். இவை அனைவர்க்கும் ஒரேபோல இருக்காது. சிலருக்கு நீர் குடிப்பது தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தும். Tornado Lifts Car: நிஜ காரை பொம்மை போல தூக்கியெறிந்த சூறாவளி.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். நல்ல உறக்கத்தின் போது சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேர்ந்தால், அவர்கள் உறங்க செல்லும் முன்னர் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். அதேபோல, உறங்க செல்வதற்கு முன்பு நீர் குடிப்பதால், சிறுநீர் பையில் சிறுநீர் அதிகளவு தேங்கும் சூழல் ஏற்படும்.
இவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது. உறங்குவதற்கு முன்பு தண்ணீரை தவிர்த்தால் சிறுநீர் உற்பத்தி என்பது குறையும். இது குறைந்தபட்சம் 6 மணிநேரம் முதல் அதிகபட்சமாக 8 மணிநேரம் வரையில் உறக்கத்தை உறுதி செய்யும். இரவு நேரத்தில் நீர்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க, பகல் நேரத்தில் போதுமான அளவு நீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
நாம் நமது உடலுக்கு தேவையான நீரை குடித்துள்ளோம் என்பதை நமது சிறுநீர் உறுதி செய்யும். உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்துடன் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் அல்லது வெள்ளை நிறத்துடன் இருத்தல் கூடாது. Google Play Store: ஆன்லைன் லோன் மோசடி தொடர்பான 3,500 செயலிகளுக்கு தடை விதித்தது கூகுள்.. அதிரடி நடவடிக்கை.!
இரவு நேரத்தில் உறங்க செல்வதற்கு 2 மணிநேரம் முன்பு திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். தாகம் எடுத்தால் நீர் குடிக்கலாம். இரவில் மிதமான சூடுள்ள நீரை குடிப்பது நல்லது. அது இரவு முழுவதும் உடலை பாதுகாக்கும். இரத்த ஓட்டத்தினை மேம்படுத்தும். கழிவுகளை அகற்ற வழிவகை செய்யும்.
இரவில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பேருதவி செய்யும். வெதுவெதுப்பான நீர் வியர்வை வழியே சருமத்தில் இருக்கும் தேவையற்ற செல்களை வெளியேற்றிவிடும். உடலின் உப்புத்தன்மை வெளியேறும். சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தமான நோயாளிகள் மருத்துவரின் அறிவுரைப்படி நீர் அருந்த வேண்டும்.