Shortness of Breath: ஆரோக்கியத்தை அறிவோம்.. மூச்சுத்திணறல் என்றால் என்ன?.. அதற்கான காரணங்கள் என்னென்ன?..!

பலருக்கும் கனமான பொருட்களை தூக்கும்போது மற்றும் படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத்திணறல் போன்று மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும் பிரச்சனை ஏற்படும்.

Template: Shortness of Breath Heart Attack

டிசம்பர், 8: ஆக்சிஜனின் அளவு சரியாக இருக்கும்போதிலும் மூச்சுவிட முடியாத நிலையை மூச்சுதிணறல் (Gasp or Shortness of Breath) என்கிறோம். பலருக்கும் கனமான பொருட்களை தூக்கும்போது மற்றும் படிக்கட்டுகளில் ஏறும்போது இதுபோன்று மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும்.

ஆனால் சிலருக்கு இதன் அறிகுறிகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றே கூறலாம். அதனை கவனிக்காமல் விட்டால் இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மூச்சுதிணறல் பிரச்சனை அல்லது அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மூச்சுதிணறலுக்கான பிற காரணங்கள் :

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு (Chronic obstructive pulmonary disease) : நுரையீரலுக்கு காற்று செல்லுதல் மற்றும் வெளியேறுதலுக்கு தடையாக அமைவதே நுரையீரல் அலர்ஜி. இதன் அறிகுறிகளாக மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுதிணறல், இருமல் போன்றவை உள்ளது. குறிப்பிட்ட எரிச்சலை உண்டாக்கும் வாயுவை நீண்ட நாட்கள் சுவாசிக்க நேரிடும்போது இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். Birth Control Medicines: அச்சச்சோ.. கருத்தடை மாத்திரைகளை உபயோகம் செய்தால் இவ்வுளவு பிரச்சனைகளா?.. பதறவைக்கும் தகவல்.. தம்பதிகளே உஷார்.! 

நிமோனியா (Pneumonia) :  நிமோனியா என்பது நுரையீரலில் உள்ள மூச்சுபைகளில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொற்று. இது காற்று பைகளில் திரவம் அல்லது சீழ் அடைப்பதால் ஏற்படுகிறது. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளாலும் நிமோனியா ஏற்படலாம். ஆரம்பத்தில் தொற்று அறிகுறிகள் குறைவாக இருக்கும். சிகிச்சை எடுக்காமல் விட்டால் அது உயிருக்கு பெரும் ஆபத்தையே விளைவிக்கும்.

மாரடைப்பு (Heart Attack) : மாரடைப்பின் முதல் அறிகுறியாக மூச்சுத்திணறலே இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் அடைப்பு அல்லது தடை ஏற்படும் போது மாரடைப்பு உண்டாகிறது. இதய தமனிகளில் கொழுப்பு கட்டிகள் சேரும்போதும் மாரடைப்பு ஏற்படலாம்.

உடற்பருமன் (Obesity): உடலில் அளவிற்கு அதிகமாக கொழுப்பு சேரும்போது மூச்சுதிணறல் ஏற்படும். மேலும் இது இதயநோய்கள் முதல் கேன்சர் வரை பல உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே உடல் எடையை குறைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இதயம் செயலிழப்பு (Heart Failure) : இதயதசைகள் ரத்தத்தை சீர்செய்யாமல் இருக்கும்போது ரத்தம் ஒரே இடத்தில் சேர்ந்து நுரையீரலில் திரவம் போன்று உருவாகும். இது மூச்சு திணறலுக்கு வழிவக்கிறது. இதனால் இதய செயலிழப்பு விரைவில் ஏற்படும்

ஆஸ்துமா (Asthma) : சுவாச பாதையில் வீக்கம் ஏற்பட்டு சிரமம் ஏற்படுவதை ஆஸ்துமா என்கின்றனர். இது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதுடன் மூச்சுதிணறலுக்கும் வழிவகுக்கிறது. தினசரி வாழ்க்கை முறையில் ஆஸ்துமா அதிகமாகும்போது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதுடன் இந்த நிலை தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்தாகும்.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் மூச்சுத்திணறல் பிரச்சனைகளின் முக்கிய காரணங்களாக கருதப்பட்டாலும், இதை தவிர பல காரணங்களும் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே, இதுபோன்ற சில அறிகுறிகள் தென்படும்போது மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 03:33 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).