Healthy Spine: முதுகுத்தண்டை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்..? எளிய பழக்க வழக்க முறைகள் இதோ..!
முதுக்கெழும்பை சீராக பராமரித்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.
மே 28, சென்னை (Health Tips): இன்றைய காலகட்டத்தில் வொர்க் பிரம் ஹோம் (Work From Home) கலாச்சாரம் அதிகரித்து வரும் சூழலில் இளைஞர்கள் பலரும் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இன்றைய உலகில், முதுகுவலி (Back Pain) ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவை ஹெர்னியேட்டட் டிஸ்க், தசைப்பிடிப்பு போன்றவையாக இருப்பினும், இதனை உறுதி செய்ய சில சோதனைகள் தேவைப்படலாம். ஆரோக்கியமான முதுகெலும்பை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது ஆகும். நிபுணர்களின் கருத்துப்படி, சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் மூலம், முதுகெலும்பை (Spine) ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். அவை என்னென்ன என்பது பற்றி இதில் பார்ப்போம். Fire Accident In Apartment Building: அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து; 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!
சீரான உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்வது, முதுகெலும்பை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்த உதவுகின்றது. யோகா, நடைபயிற்சி, நீச்சல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கான சிறந்த உடற்பயிற்சிகள் ஆகும்.
சரியான முறையில் அமர்வது: மோசமான தோரணையில் அமர்வது முதுகுத்தண்டில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, முதுகுவலியை உண்டாக்குகிறது. உட்கார்ந்து இருக்கும் போதும், நிற்கும் போது, தூங்கும் போது மற்றும் நடக்கும்போது நல்ல தோரணையை பராமரிக்க முயற்சிக்கவும். தோள்களை பின்னால் வைக்கவும், மார்பை முன்னோக்கி வைத்து, தோள்களுக்கு மேல் காதுகளை வைக்கவும். தூங்கும் போது, சரியான தலையணையை தேர்வு செய்ய வேண்டும்.
நேரான முதுகெலும்பை பராமரிக்கவும்: முதுகில் அதிகளவு அழுத்தம் கொடுத்து தூங்கினால், கீழ் முதுகில் அழுத்தத்தை குறைக்க கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து உறங்கலாம். பக்கவாட்டில் தூங்குபவர்களுக்கு இடுப்பை சமநிலையில் வைக்க, முழங்கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைக்கலாம். மிகவும் வசதியாக இருக்க, சில வெவ்வேறு வகையான தலையணைகளை முயற்சித்து பார்க்கலாம்.
மனஅழுத்தத்தை நிர்வகித்தல்: சரியான தூக்கமின்மை காரணமாக முதுகுவலி ஏற்படும். ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேரம் நல்ல உறக்கம் வேண்டும். இதனை சரியாக பழக்கப்படுத்தவும். சீரற்ற தூக்கம், மன அழுத்தத்தை உண்டாக்கி தசைகளில் பதற்றத்தை ஏற்படுத்தி, முதுகுவலிக்கு வழிவகுக்கும். இதனை சரிசெய்ய தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்ப பயிற்சிகளை செய்யலாம்.