World Largest Rivers: உலகிலேயே மிக நீளமான நதிகள் என்னென்ன தெரியுமா?.. இன்றே தெரிஞ்சுக்கோங்க., அசந்துபோவீங்க..!
உயர்ந்து பார்க்கும் மலைகளில் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி ஆற்று நீராக உருப்பெறுகிறது.
டிசம்பர், 11: ஒருநாட்டின் வளம் அந்நாட்டில் கரைபுரண்டு ஓடும் ஆறின் (Rivers) ஓட்டத்தில் மறைந்துள்ளது. உயர்ந்து பார்க்கும் மலைகளில் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி ஆற்று நீராக உருப்பெறுகிறது. இந்த ஆற்று நீரை சேமித்து வைத்து முறையான திட்டமிடலுடன் பராமரித்து உபயோகம் செய்தால் உலகளவில் நாமே நீர் மேலாண்மை விஷயத்தில் முன்னோடியாக இருப்போம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உலகளவில் தொன்றுதொட்டு பல ஆறுகள் இருக்கின்றன. ஆறுகளின் அருகிலேயே மக்களின் வாழ்க்கை தொடங்கியுள்ளது. அதன்தொடர்ச்சியாக நாகரீகம் வளர்ந்துள்ளது என்பது நாம் அறிந்த உண்மை. ஆற்றின் தொடக்கம் நிலப்பரப்பாக இருந்தாலும், அது பள்ளத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கி இறுதியில் கடலினை அடைகிறது.
அது கடலை அடைவதற்கு முன்பு, தான் உருவாகிய இடத்தில் இருந்து கடலுடன் பின்னி பிணைப்பதற்கு முன்பு வரை தன்னை நம்பி கரையோரம் இருக்கும் மக்களுக்கும், மரங்களுக்கும் தண்ணீரை தாராளமாக வழங்கி பசுமைப்படுத்தி செல்கிறது. இவ்வாறாக நாட்டின் வளத்தில் முக்கிய பங்கை கொண்டுள்ள ஆறுகளில் (World Largest Rivers List) உலகளவில் பெரியது எது? எந்தெந்த நாடுகளில் அவை பாய்கிறது? என்பதை இன்று தெரிந்துகொள்ளலாம்.
நைல் நதி, ஆப்பிரிக்கா (Nile River, Africa): ஆப்பிரிக்காவில் தொடங்கும் நைல் நதி எத்தியோப்பியா, எரிடேரியா, சூடான், உகாண்டா, தன்சானியா, கென்யா, ரவாடா, குருண்டி, எகிப்து, காங்கோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைக் கடந்து 6,650 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்து மெடிடெர்ரனேன் (Mediterranean Sea) கடலில் கலக்கிறது.
அமேசான் நதி, தென்னமெரிக்கா (Amazon River, South America): தென் அமெரிக்காவில் தொடங்கும் அமேசான் நதியானது பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, ஈகுவாடார், டயானா ஆகிய நாடுகளின் வழியே 6,575 கிலோ மீட்டர் பயணம் செய்து அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
யாங்ட்ஜீ நதி, சீனா (Yangtze River, China): சீனாவில் தொடங்கி சீனாவிலேயே முடிவும் யாங்ட்ஜீ நதியானது 6,300 கிலோமீட்டர் பயணம் செய்து தென் சீன கடலில் கலக்கிறது. இது ஒரே நாட்டிற்குள் தனது வளத்தை பெருக்கும் ஆறுகளில் நீளமானது ஆகும். HealthTips: வாழைப்பழத்தை சாப்பிடும்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?.. அலட்சியமாக இருக்காதீர்கள்..!
மிஸிஸிபி நதி, அமெரிக்கா (Mississippi River): அமெரிக்காவில் தொடங்கும் மிசிசிபி ஆறு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் வழியே 6,275 கிலோ மீட்டர் பயணம் செய்து மெக்சிகோ வளைகுடா (Gulf Of Maxico) கடலில் கலக்கிறது.
எனிஸ்-அங்காரா-செலெங்கே-இடர் நதி, ரஷியா (Yenisei - Angara - Selenga River): எனிஸ்-அங்காரா ஆறு ரஷ்யாவில் தொடங்கி மங்கோலியா வழியே 5,539 கிலோமீட்டர் பயணம் செய்து காரா (Kara Sea) கடலில் கலக்கிறது.
மஞ்சள் ஆறு, சீனா (Yellow River, China): சீனாவில் தொடங்கி சீனாவிலேயே முடியும் மற்றொரு நீளமான நதி மஞ்சள் நதி. இது 5,464 கிலோ மீட்டர் பயணம் செய்து சீனாவின் போகாய் (Bohai Sea) கடலில் கலக்கிறது.
ஒபி-ரட்டிஷ், ரஷியா (Ob-Irtysh River, Russia): ரஷ்யாவில் தொடங்கும் மற்றொரு மிகப் பெரிய நீளமான ஆறான ஓபி ரட்டிஷ் ரஷ்யா, கஜகஸ்தான், சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளைக் கடந்து 5,410 கிலோமீட்டர் பயணம் செய்து ஓபி வளைகுடா கடலில் கலக்கிறது.
பரனா, உருகுவே (Parana River, Uruguay): உருகுவே நாட்டில் தொடங்கும் பரானா நதியானது 4,480 கிலோமீட்டர் பயணம் செய்து பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, உருகுவே ஆகிய நாடுகளை வளப்படுத்தி வெள்ளி கடலில் (Rio de la Plata) கலக்கிறது.
காங்கோ நதி, ஆப்பிரிக்கா (Cango River, Africa): ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தொடங்கும் காங்கோ நதியானது 4,700 கிலோ மீட்டர் பயணம் செய்து காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா, அங்கோலா, தன்சானியா, கேமரூன், சாம்பியா, புரூண்டி, ரவாடா ஆகிய நாடுகளை கடந்து அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
அமுர் நதி - ஆசியா (Amur River, Asia): ஆசியாவில் தனது பயணத்தை தொடங்கும் அம்மூர் நதியானது 4,480 கிலோ மீட்டர் பயணம் செய்து ரஷ்யா, சீனா, மங்கோலியா நாடுகளை வளப்படுத்தி கடலில் கலக்கிறது.