Resignation Letter: "திரும்பி வருவேன்" பதவி விலகல் கடிதத்தில் ட்விஸ்ட் வைத்த பணியாளர்.. ஆடிப்போன நிர்வாகம்.!
"எனக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது, அது சரிப்படவில்லை என்றால் திரும்பி வருகிறேன்" என பதவி விலகல் கடிதம் கொடுத்த நபரின் மனு வைரலாகி வருகிறது.
அக்டோபர் 15, அக்ரா (World News): உலகளவில் செயல்பட்டு வரும் ஒவ்வொரு நிறுவனத்திற்கு எனவும், அந்தந்த நிறுவனங்கள் சார்பில் பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு தனிநபரை வேலைக்கு தேர்வு செய்வதில் தொடங்கி, அவர் பதவி விலகும்போது கூட நிறுவனத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது என்பது அவசியமாகிறது. தனியார் துறைகளில் வேலைபார்ப்போரை பொறுத்தவரையில், அவர்களின் வேலை தொடக்கம் முதல் முடிவு வரை ஒருசில விதிமுறைகள் என்பது பொதுவானதாக இருக்கும். பணியாளர் வேலைக்கு சேரும்போது அதற்கான சான்றிதழ் வழங்கப்படும், அவர் விருப்பமாக பணியை விட்டு விலகிச் செல்லும்போது பதவி விலகல் கடிதம் என்பது வழங்கப்பட வேண்டும். Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஹிஸ்புல்லா அமைப்பின் திடீர் தாக்குதல்.!
திரும்பி வருவேன்:
தனியார் துறைகளில் இருப்போர் பெரும்பாலும் பதவி விலகலின்போது, பதவி விலகுவதற்கான தனிப்பட்ட காரணங்கள் என பல இருந்தாலும், அதனை பொத்தாம்பொதுவாக குறிப்பிட்டு கடிதத்தை எழுதி இருப்பார்கள். இதனிடையே, நேர்மையின் சிகரமாக இருக்கும் ஒரு ஊழியர், "எனக்கு வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அதனால் நான் பதவி விலகுகிறேன். அங்கு எனக்கு பணி சரிப்படவில்லை என்றால், நான் மீண்டும் இங்கு வந்து (i Will Be Back Resignation Letter) பணியாற்றுவேன்" என விலகல் கடிதம் எழுதிக்கொடுத்து தனது நிர்வாகத்தை அதிர்ச்சிப்படுத்தி இருக்கிறார். Software Engineer Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழப்பு.. சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
நெட்டிசன்கள் கலாய் & பாராட்டு:
இந்த புகைப்படம் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் கவனம் பெற்றுள்ளது. ஒருசிலர் சாட் ஜிபிடி அறிமுகம் ஆகும் முன்னர் எழுதப்பட்ட கடிதமாக இருக்கலாம், இதில் இலக்கண பிழைகள் இருக்கிறது என கலாய்த்து வருகின்றனர். மற்றொரு தரப்பில், "உங்களின் முதலாளி மீண்டும் நீங்கள் பணிக்கு வரும்போது ஊதியத்தை குறைத்தால் பரவாயில்லையா?" எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் வெகு சிலரே "ஊழியரின் நெஞ்சார்ந்த நேர்மையான குணத்தை கட்டாயம் பாராட்ட வேண்டும்" என தெரிவிக்கிறார்கள். இந்த கடிதம் ஆப்ரிக்காவில் உள்ள கானா, நசுடா வாசா நகரில் செயல்படும் நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
கடிதம் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது: