Snake Protect Tomato: தக்காளியை பாதுகாக்க வீடுதேடிவந்த நாகராஜன்; பலத்த பாதுகாப்பால் பதறிப்போன குடும்பத்தினர்.!

இதனை தவிர்க்க மக்கள் கூக்குரல் இட்டாலும், அடுத்தவேளை உணவுக்காக அதன் உச்சகட்ட விலையிலேயே வாங்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Snake Protect Tomato (Photo Credit: Twitter)

ஜூலை 21, சென்னை (Trending Video): இந்தியாவில் வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழை, காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் பெய்துவந்த கனமழையின் காரணமாக விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த விளைபொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி நாசமாகின. இதனால் காய்கறிகள் வரத்து அதிகளவு குறைந்தது. குறிப்பாக தக்காளியின் வரத்து கடுமையாக சரிந்து, விலை உச்சத்தை எட்டியது.

பல மாநிலங்களில் தக்காளியின் விலை குறிந்தபட்சமாக ரூ.140 முதல் ரூ.300 வரை கிலோவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி பெட்டி விலை மிகவும் மலிவாக இருந்ததால், விவசாயிகள் அதனை வேதனையோடு கீழே கொட்டி சென்றனர். Johannesburg Blast: சாலைகளில் புதைக்கப்பட்டு இருந்த எரிவாயு வழித்தடம் வெடித்து பயங்கர விபத்து; ஒருவர் பலி, 48 பேர் படுகாயம்.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

தற்போதைய சூழலில் பெட்டியின் விலை ஆயிரக்கணக்கில் செல்வதால், கிலோ தக்காளியின் விலையும் உச்சம் பெற்றுள்ளது. நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபமும் கிடைத்தது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு வீட்டிற்குள் புகுந்த பாம்பு, அவர்கள் சமைக்க வாங்கி வைத்திருந்த காய்கறியில் சென்று பதுங்கியது. இதனைக்கண்டு பதறிப்போன குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் பாம்பை இலாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

பாம்பு தக்காளிகளுக்கு அருகே சீறிப்பாயும் விடியோவை பதிவிட்டுள்ள நபர், தக்காளியின் விலை உயர்வு காரணமாக அதனை பாதுகாக்க பாம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார் என கலாய்க்கும் வகையில் கூறியுள்ளார்.