Woman was Mauled by a Buffalo: பெண்ணை முட்டிதூக்கி ஓட்டமெடுத்த எருமை; 25 இடங்களில் தையல்.. உயிருக்கு போராடும் 2 குழந்தைகளின் தாய்.. சென்னையில் கொடூரம்.!
2 குழந்தைகளின் தாய்க்கு எமனாக அமைந்த பரபரப்பு சம்பவத்தின் முதற்கட்ட தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூன் 17, திருவொற்றியூர் (Chenai News): சென்னையில் உள்ள திருவொற்றியூர் (Tiruvottiyur Buffalo Attack) பகுதியில், நான்கு முனை சந்திப்பில் பெண் ஒருவர் நடந்துவந்துகொடு இருந்தார். அச்சமயம், அங்கு ஆக்ரோஷத்துடன் ஓடிவந்த எருமை மாடு, பெண் ஒருவரை தனது கொம்பினால் முட்டித்தூக்கி தரதரவென இழுத்து சென்றது. மேலும், அவரை மீட்க ஓடோடிச்சென்ற 2 இளைஞர்களையும் எருமை மாடு தாக்கி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 16), மதியம் 02:50 மணிக்கு மேல் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. Tech Layoff: 10 ஆயிரம் பேரை 6 மாதத்திற்குள் பணிநீக்கம் செய்த முன்னணி நிறுவனங்கள்; வெளியான அதிர்ச்சி தகவல்.!
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கச்சென்ற பெண்ணின் உயிர் ஊசல்:
இதுகுறித்து விசாரிக்கையில், திருவொற்றியூர், அம்சா தோட்டம் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் மதுமதி. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள், கணவர் இருக்கின்றனர். சம்பவத்தன்று சோமசுந்தரம் நகரில் உள்ள உறவினர்கள் வீட்டில், மதுமதி தனது குழந்தைகளை விட்டுவந்துள்ளார். பின் உறவினரின் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு, மதியம் உணவு வழங்க சென்றுள்ளார். அச்சமயம் நான்குமுனை சந்திப்பில் மூர்க்கமாக வந்த எருமை மாடு (Woman Mauled by Buffalo in Thiruvotriyur), அவரை முட்டித்தூக்கியது. இதில் அவரின் ஆடை எருமையின் கொம்புகளுடன் சிக்கிக்கொள்ள, பெண் எருமையுடன் இழுத்து செல்லப்பட்டுள்ளார். Thakkali Pongal Sadam: சுவையான, மதுரை பேமஸ் தக்காளி பொங்கல் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
நாய் தாக்குதலை தொடர்ந்தும் மீண்டும் அச்சுறுத்தலாகும் மாடு பிரச்சனை:
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். பெண்ணை மீட்க முயற்சித்த சந்திரசேகர் என்பவரையும் மாடு தாக்கியுள்ளது. மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட மதுமதிக்கு, காயமடைந்த இடத்தில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். பெண்ணை காப்பாற்ற முயன்று இருவர் காயம் அடைந்தனர். அவர்களும் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இந்த விஷயம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே தலைநகரில் நாய் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எருமை மாடு தாக்குதல் நடந்துள்ளது.
தெருக்களில் மாடுகளை சுற்றித்திரியும் வகையில் செயல்படும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி எச்சரித்து இருந்தது. இதனிடையே தான் தற்போது இத்துயரம் நடந்துள்ளது.
களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
பதைபதைக்க வைக்கும் வீடியோ இதோ: