![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1718613869Paytm%2520Swiggy%2520Flipkart%2520Logo%2520%2528Photo%2520Credit%2520Wikipedia%2529-380x214.jpg)
ஜூன் 17, சென்னை (Technology News): கொரோனா பரவலுக்கு பின்னர் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறைகள் அதிகரித்திருந்த நிலையில், கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தோர் அனைவரும் அலுவலகத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டனர். பணி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ், அலுவலகத்திற்கு வர மறுத்தவர்கள் வேலையிழப்பு, தொடர்பான எச்சரிக்கையையும் சந்தித்து இருந்தனர். இதனிடையே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அறிமுகம் மற்றும் நிதிச்சுமை போன்ற காரணங்களால் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் பல்வேறு மனித உழைப்புசார் நிறுவனங்களும் பணிநீக்கங்களை அறிவித்தன. இது மிகப்பெரிய வேலை இழப்பு பிரச்சனைக்கு வழிவகை செய்தது. Thakkali Pongal Sadam: சுவையான, மதுரை பேமஸ் தக்காளி பொங்கல் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
6000 பேர் வரை பெடிஎம் பணிநீக்கம்:
இந்நிலையில், 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய அளவில் தொடக்க நிறுவனமாக இருந்து வரும் பிளிப்கார்ட், ஸ்விக்கி, பெடிஎம் உட்பட பல நிறுவனங்கள் மறுசீரமைப்பு, நிதி நெருக்கடி உட்பட பிற நிர்வாக காரணங்களால் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதனை செயல்படுத்தி இருந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பெடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு காரணமாக 6300 பேர் வரை பணிநீக்கம் செய்தது. அதேபோல, பைஜூ நிறுவனம் சம்பள தாமதம், ஆட்குறைப்பு போன்ற நடைமுறையை எதிர்கொண்டு இருந்தது. Thakkali Pongal Sadam: சுவையான, மதுரை பேமஸ் தக்காளி பொங்கல் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
மொத்தமாக 10 ஆயிரம் பேருக்கு பறிபோன வேலை:
ஸ்விக்கி நிறுவனமும் 400 பேரை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், ஓலா 600 பேர் வரை பணிநீக்கி இருந்தது. கடந்த ஆண்டை விட 2024ம் ஆண்டு தொழில் நிறுவனங்களுக்கு நல்ல இலாபத்துடன் தொடக்கம் இருந்த போதிலும், அவர்களின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் பணிநீக்கத்திற்கு வழிவகை செய்தன. அதேபோல, நிதிஉதவி பெற்று செயல்பட்டு வரும் நிறுவனங்கள், செலவுகளை மிச்சப்படுத்த கடந்த 6 மாதமாக பணியாளர்களை குறைத்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் பணிநீக்கத்தை திடீரென அதிரடியாக மேற்கொண்டுள்ளது. சோமாடோ, லைகா போன்ற டெலிவரி வர்த்தக நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் அதிக பணியமர்தலை உறுதிபூண்டுள்ளது. இவ்வாறாக மொத்தமாக கடந்த 6 மாதங்களுக்குள் 10000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.