வானிலை: இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
விரிவான வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் வாசிக்கவும், இணைந்திருக்கவும்.
அக்டோபர் 12, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Tamilnadu Weather Update) நிலவியுள்ள மாற்றத்தால், அடுத்த ஏழு தினங்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான சாதக சூழல் நிலவியுள்ளது. இந்த விஷயம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. நேற்று (11-10-2024) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (12-10-2024) காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 13-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இன்றைய வானிலை (Today Weather):
12.10.2024 இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Tiruvallur Train Accident: சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில் மோதி பயங்கர விபத்து; 19 பேர் காயம்.. தமிழ்நாடே அதிர்ச்சியான சம்பவம்.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
13.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.14 வானிலை (Weather Forecast Tamilnadu) நிலவரம்:
14.10.2024 அன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.!
சென்னை (Chennai Weather Today) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26” செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
12.10.2024 அன்று முதல் 16.10.2024 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா குமரிக்கடல், தென்மேற்கு, அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.10.2024 அன்று முதல் 14.10.2024 வரை கேரள - கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், மத்திய அரபிக்கடல், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல்,மத்திய மேற்கு அரபிக்கடல், ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.