அக்டோபர் 12, கவரப்பேட்டை (Tiruvallur News): கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருந்து, பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா நோக்கி, மைசூர் - தர்பங்கா பாத்மதி (12578) அதிவிரைவு வண்டி, வெள்ளிக்கிழமையான நேற்று இரவு சுமார் 07:30 மணியளவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கவரப்பேட்டை இரயில் நிலையம் பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம், எதிர்திசையில் வந்த சரக்கு இரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
19 பேர் காயம்:
இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பயணித்த பயணிகளில் 19 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 10 க்கும் மேற்பட்ட இரயில் பெட்டிகள் கவிழ்ந்தன. ஒன்றோடொன்று மோதி பெட்டிகள் அங்கும்-இங்குமாக உருண்டு கிடந்தன. தகவல் அறிந்து சென்ற மீட்புப்படையினர், விரைந்து செயல்பட்டு காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Deforestation: வனத்துறையை சீரழிக்கும் மற்ற துறைகள்.. மீதி இருக்கும் நிலங்கள் வெறும் 7.6 சதவீதம் மட்டுமே.!
மனித தவறு காரணம்:
இரயில் ஓட்டுநர்களும் காயமடைந்த நிலையில், அவர்களும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் அவ்வழியே இயங்கும் இரயில்கள் முழுவதுமாக என 18 எக்ஸ்பிரஸ் இரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வழித்தடத்தை சீரமைக்கும் பணியில் இரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இவ்விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், முதற்கட்டமாக மனித தவறினால் விபத்து நடந்துள்ளது அம்பலமானது. தொடர்ந்து இரயில்வே அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரில் ஆய்வு செய்ய உத்தரவு:
மெயின் லைனில் வந்துகொண்டு இருந்த அதிவிரைவு இரயில், லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது நேரடியாக மோதி இருக்கிறது. லைன்களுக்கான சிக்னல் இரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் ஸ்டேஷன் மாஸ்டரால் தரப்படும் நிலையில், மனித தவறின் காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் நாசர் ஆகியோரை நிகழ்விடத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இரயில் விபத்திற்குள்ளானதன் கழுகு காட்சிகள்:
(2/2) Mysuru-Dharbaga Train Accident: Aerial view of the Express train accident site at Kavaraippettai.
📸: @manivasagan_ #dtnext #trains #trainderailed #tiruvallur #mysuruexpress#bagmatiexpress #traincollsion #trainderailment #passengers #safety #trainaccident pic.twitter.com/4iJjhf9rmQ
— DT Next (@dt_next) October 12, 2024