Drug Smuggling Gang: காய்கறி வியாபரம் செய்வதாக வீடு எடுத்து கஞ்சா, போதை காளான் விற்பனை; கோவையில் கைதான கும்பல் திடுக்கிடும் வாக்குமூலம்.!

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்த கும்பல் கைது செய்யப்பட்டது.

Thondamuthur Drug Case Accuse 14-Nov-2024 (Photo Credit: @News18Tamilnadu X)

நவம்பர் 15, தொண்டாமுத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் கஞ்சா, போதை ஊசி, புகையிலை, போதை மாத்திரை உட்பட போதை வஸ்துக்களின் விற்பனையை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், பேரூர் துணை கண்காணிப்பாளர் சிவகுமார், ஆலந்துறை காவல் ஆய்வாளர் குமார் ஆகியோரின் தலைமையிலான காவல்துறையினர், தொண்டாமுத்தூர், தீனாம்பாளையம், ராஜேஸ்வரி நகர் பகுதிகளில் சோதனை நடத்தினர். Triplicane SBI Bank: திருவல்லிக்கேணி எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பிய பணம்.. காவல்துறை விசாரணை.! 

5 பேர் கும்பல் கைது:

சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர்களை பிடித்து விசாரணை செய்த நிலையில், அவர்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் காளான், புகையிலைப்பொருட்கள் போன்றவை இருந்தன. இதனால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான பி.என் புதூரில் வசித்து வரும் அமரன் (வயது 30), பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஜனாதன் சதீஷ் (வயது 31), ஆலந்துறை பெயிண்டர் பிரசாந்த் (வயது 30), ஓட்டுநர் சரவண குமார் (வயது 26), நிஷாத் (வயது 23) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

காய்கறி வியாபாரம் செய்வதாக பகீர் செயல்:

இவர்கள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை காளான், கஞ்சா உட்பட வஸ்துக்களை விற்பனை செய்து வந்தது அம்பலமானது. காய்கறி வியாபாரம் செய்து வருவதாக வீடுகளை வாடகைக்கு எடுத்து, சட்டவிரோதமாக வீட்டில் போதை வஸ்துக்களை பதுக்கி வைத்து இவ்வாறான செயலை முன்னெடுத்ததும் அம்பலமானது. இவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.13 இலட்சம் மதிப்புள்ள போதை காளான், கிலோ கஞ்சா, 13 கிலோ புகையிலை பொருட்கள், 4 டூவீலர், 6 ஸ்மார்ட்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.