நவம்பர் 15, திருவல்லிக்கேணி (Chennai News): சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி (Triplicane), திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில், பிஎன்ஜி காம்ப்ளக்சில் பாரத் ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு எதிர்புறம் பாரத் ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை வழக்கம்போல பணியாளர்கள் வேலைக்கு வந்தனர்.
காவல்துறையினர் விசாரணை:
இதனிடையே, வங்கியின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில், கொள்ளை சம்பவம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். வங்கியில் கொள்ளை நடந்துள்ளதா? இல்லையா? என்பது தெரியவில்லை. Youth Dies in Guindy Hospital: கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பலி; சிகிச்சை கிடைக்கவில்லை என உறவினர்கள் குமுறல்.!
சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு:
கொள்ளையர்கள் வங்கிக்குள் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடருகிறது. வங்கியின் உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் நிகழ்விடத்தில் குவிந்து விசாரணை தொடங்கி இருக்கின்றனர். திருவெல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் சந்தோஷும் நிகழ்விடத்தில் முகாமிட்டுள்ளார். சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆய்வுக்கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
கொள்ளை நடக்கவில்லை - காவல்துறை அறிவிப்பு:
இந்நிலையில், ஆய்வுக்குப்பின்னர் விளக்கம் அளித்துள்ள காவல்துறை தரப்பு, "வங்கியில் கொள்ளை முயற்சி மட்டுமே நடந்துள்ளது. பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. ஆனால், வங்கிக்கு அருகே இருந்த ரேடியோ கடையில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்த நிலையில், அவர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் அடையாளம் சேகரிக்கப்படுகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.