Chennai Accident: தோழியுடன் சைக்கிளில் சென்ற மாணவி மீது பேருந்து மோதி பயங்கரம்; ஒருவர் பலி., சென்னையில் சோகம்.!

சாலையோரம் பயணம் செய்த மாணவியின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளி மனைவி துள்ளத்துடிக்க உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Chennai School Girl Dies Accident on 08-Dec-2024 Case (Photo Credit: @PolimerNews X / Pixabay)

டிசம்பர் 08, அடையார் (Chennai News): சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிகள் மஞ்சுளா, தீதித்யா. இவர்கள் இருவரும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் ஆவார்கள். தோழிகளான இருவரும், நேற்று தங்களின் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர்.

நிகழ்விடத்திலேயே மரணம்:

இருவரும் அங்குள்ள பெசன்ட் அவென்யூ சாலையில் சென்றுகொண்டு இருந்தபோது, எதிர்திசையில் வந்த தனியார் பேருந்து மாணவிகளின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் மிதிவண்டியை இயக்கிய மஞ்சுளா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். Egg Price in Tamilnadu: முட்டை விலை கிடுகிடு உயர்வு.. சென்னையில் ரூ.7 க்கு விற்பனை.! 

காவல்துறை விசாரணை:

மேலும், பின்னால் அமர்ந்து வந்த மாணவி தீதித்யா, படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவி மஞ்சுளாவின் உடலை மீட்டு, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

பேருந்து ஓட்டுனருக்கு வலைவீச்சு:

மேலும், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் ஓட்டுநராக ராஜாராம் என்பவரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் நடந்த போராட்டம் ஒன்றுக்கு, ஆசிரியர்களை கன்னியாகுமரியில் இருந்து பேருந்து அழைத்து வந்தது தெரியவந்தது.

இவர்கள் போராட்டத்திற்கு பின் பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி சென்றுகொண்டு இருந்த சமயத்தில், வழியில் விபத்து ஏற்பட்டது அப்பளமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது..