Egg | Koyambedu Market (Photo Credit: Pixabay / @TOICitiesNews X)

டிசம்பர் 08, சென்னை (Chennai News): தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ஒவ்வொரு நாளும் முட்டையின் விலையை அதன் உற்பத்தி மற்றும் வரத்துக்கேற்ப நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.4 முதல் ரூ.5 வரை இருந்த முட்டை விலை, சமீபகாலமாகவே ரூ.5 முதல் ரூ.6 என்ற அளவில் உயருகிறது. இதனால் சில்லறை கடைகளில் முட்டை (Egg Price Today) ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகமே அதிர்ச்சி.. மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி 10 க்கும் மேற்பட்ட இளைஞர்களால் சீரழிப்பு; சென்னையில் மீண்டும் பயங்கரம்.! 

முட்டை விலை:

இந்நிலையில், சென்னையில் முட்டை விலை சில்லறை விற்பனையில் ரூ.6.50 முதல் ரூ.7 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையானது ரூ.5.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை உயர்ந்துள்ளது என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

முருங்கைக்காயின் (Drumstick Price Today) விலை உயர்வு:

அதேநேரத்தில், சென்னை கோயம்பேடு (Koyambedu Market) காய்கறி சந்தையில், கிலோ முருங்கைக்காய் (Murungaikai Price Today) ரூ.400 க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.450 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு, மழை குறைவு காரணமாக முருங்கைக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.