"என்னை மன்னித்துவிடு அம்மா" - கைக்குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தாயின் விபரீத செயல்.. சென்னையில் பயங்கரம்.!

குடும்ப பிரச்சனையில் கடிதம் எழுதிய தாய் இளைய மகனை கழுத்தறுத்து கொலை செய்து, பின் மூத்த மகனை கொலை செய்ய முயன்றார். இறுதியில் தாயும் தற்கொலைக்கு முயன்றார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கீழ்ப்பாக்கத்தில் நடந்துள்ளது.

"என்னை மன்னித்துவிடு அம்மா" - கைக்குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தாயின் விபரீத செயல்.. சென்னையில் பயங்கரம்.!
Girl Sad | Crime File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 23, கீழ்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள கீழ்பாக்கம் (Kilpauk), புல்லாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் திவ்யா (வயது 32). பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார் (வயது 34). இவர் பெருங்களத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திவ்யா - ராம்குமார் தம்பதிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் 4 வயதுடைய லக்சன் குமார், ஒன்றரை வயதுடைய புனித குமார் என 2 மகன்கள் இருக்கிறார்கள்.

தம்பதிகளிடையே மனக்கசப்பு:

தம்பதிகளின் குடும்பம் வறுமையின் பிடியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது தகராறு நடந்துள்ளது. மேலும், திவ்யா பெரும்பாலான நேரங்களில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். இந்த விவகாரத்தில் ராம்குமார் - திவ்யா இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தம்பதிகளிடம் எழுந்த தகராறு காரணமாக, இருவரும் பிரிந்துள்ளனர். Edappadi Palaniswami: குடியரசுதின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு நிராகரிப்பு? எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில்.! 

நடத்தை அவதூறு:

கணவரை பிரிந்த திவ்யா, தனது 2 குழந்தைகளோடு கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் மனைவியை நேற்று (டிச.22, 2024) செல்போனில் தொடர்பு கொண்ட ராம்குமார், ஒன்றாக பிரச்சனைகளை மறந்து வாழலாம் என கூறியுள்ளார். திவ்யாவோ உன்னுடன் இனி வாழ இயலாது என கூறவே, ராம்குமார் ஆத்திரத்தில் திவ்யாவின் நடத்தை குறித்து அவதூறாக பேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

Murder | crime file pic (Photo Credit: pixabay)

இளையமகன் துள்ளத்துடிக்க கொலை:

வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த திவ்யா, கணவரின் வார்த்தைகளால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். அவரின் பெற்றோரும் வீட்டில் இல்லாததால், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஒன்றரை வயதுடைய குழந்தை புனித குமாரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். பின் மூத்த மகன் லக்சன் குமாரையும் படுக்கை அறையில் கழுத்தறுத்து இருக்கிறார். லக்சன் வழியால் அலற, திவ்யாவின் அத்தை பத்மாவதி என்பவர், சத்தம் கேட்டு வந்துள்ளார். TN Govt Bus: பேருந்துகளை இயக்கும்போது செல்போனில் பேசினால் 29 நாட்கள் வேலை காலி; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உச்சகட்ட எச்சரிக்கை.! 

கழுத்தை அறுத்து காண்போரை அதிரவைத்த திவ்யா:

கதவு தாழிட்டு இருந்ததால் விபரீதத்தை புரிந்துகொண்டவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை தட்டி இருக்கிறார். மூத்த மகனின் கழுத்தை திவ்யா அறுப்பதைக் கண்டு அதிர்ந்துபோனவர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில், மகன்களை அறுத்த கத்தியால் தனது கழுத்தையும் அறுத்தார். பின் கதவையும் திறந்தார். புனித் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்சன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி:

108 அவசர ஊர்தி உதவியுடன் தாய் திவ்யா, உயிருக்கு போராடிய மூத்த மகன் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்து வந்த கீழ்பாக்கம் காவல்துறையினர், ஒன்றரை வயதுடைய குழந்தை புனித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்தனர். திவ்யாவின் கழுத்து அறுபட்ட காரணத்தால், அவரால் பேச இயலவில்லை. தண்டவாளத்தில் திடீர் விரிசல்.. 1000 பேரின் உயிர் தப்பியது.. சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி இரயில் பயணிகள் அதிர்ச்சி..! 

கடிதத்தில் அதிர்ச்சி தகவல்:

வீட்டில் நடந்த சோதனையில் திவ்யா எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "எனக்கு உடல்நலக்குறைவு உள்ளது. இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். நான் இறந்தால் குழந்தைகள் அனாதையாக நிற்பார்கள் என்பதால், அவர்களையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். என்னை மன்னியுங்கள். எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. மன்னித்துவிடு அம்மா" என தகவல் இருந்தது.

காவல்துறை விசாரணை:

இதனையடுத்து, திவ்யாவின் மீது கொலை & கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரின் கணவர் ராம்குமாரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். திவ்யாவின் சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மூத்த மகன் லக்சன் குமார், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement