டிசம்பர் 23, தலைமை செயலகம் (Chennai News): குடியரசு தினவிழா 2025 (Republic Day 2025) கொண்டாட்டத்திற்கு இந்தியாவே தயாராகி வருகிறது. டெல்லியில் குடியரசுதினவிழா அன்று, முப்படைகளின் அணிவகுப்பு, மாநில (Delhi Parade 2025) வாரியான பாரம்பரிய கலைகள் ஆகியவை குடியரசுத்தலைவர், பிரதமர் முன்பு காட்சிப்படுத்தப்படும். இதனை காண திரளான மக்கள் வருவார்கள். இதனிடையே, குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு மாநில அலங்கார அணிவகுப்பு ஊர்தி நிகராகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palaniswami) குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்:
இந்த விஷயம் குறித்து அவர் பதிவு செய்துள்ள எக்ஸ் வலைப்பதிவில், "குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு (Tamilnadu Parade) ஊர்தி அஇஅதிமுக (AIADMK) ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு, ஆனால் விடியா திமுக (DMK) அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன், முக ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்" என தெரிவித்துள்ளார். வானிலை: டிச.24 முதல் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
முற்றிலும் தவறான தகவல்:
இந்த விஷயத்தை மறுத்துள்ள தமிழக அரசு மற்றும் அதன் உண்மை சரிபார்ப்பகம், உண்மைக்கு புறம்பான தகவலை பரப்ப வேண்டாம். தமிழக அரசின் மாநில அணிவகுப்பு ஊர்தி 2025 குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்க இயலாது, சுழற்சி முறையில் நமக்கான ஒதுக்கீடு 2026ம் ஆண்டு மீண்டும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான பதிவில், "குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி. 2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.
சுழற்சி முறையில் 2026ல் உறுதி:
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் குற்றசாட்டு:
குடியரசு தின விழாவில்,
தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி @AIADMKOfficial ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு,
ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால்,…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) December 22, 2024
எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு, உண்மை சரிபார்ப்பகம் பதில்:
குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி
2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது.
இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு… https://t.co/IAPGNb8mkR pic.twitter.com/94bpBqH4B0
— TN Fact Check (@tn_factcheck) December 22, 2024