டிசம்பர் 23, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை சார்பில், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. இந்த போக்குவரத்து சேவையில் நிரந்தர, தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, அதன்பேரில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஒருசில நேரம் பேருந்து ஓட்டுனர்கள் செல்போனை பார்த்தபடியும், அதில் தீவிரமாக பேசியபடியும் வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் சில நேரம் விபத்துகளும் நடக்கின்றன. இவ்வாறான செயல்கள் தொடர்ந்து வந்ததால், அதனை போக்குவரத்துத்துறை நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. Edappadi Palaniswami: குடியரசுதின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு நிராகரிப்பு? எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில்.!
வைரலாகிய சர்ச்சை வீடியோ:
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தனது பேருந்து ஓட்டுனர்களை அறிவுறுத்தி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை பேருந்து ஓட்டுனர்கள், அவ்வப்போது செல்போன் பேசியபடி வாகனம் இயக்குவது, செல்போனை பார்த்தபடி வாகனத்தை இயக்கம் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு என்பது நமக்கு முக்கியம்.
தற்காலிக பணிநீக்கம் எச்சரிக்கை:
ஆகையால், இனி வரும் நாட்களில் இவ்வாறான சர்ச்சை செயலில் ஈடுபட்டு புகார் பெறப்படும் ஓட்டுனருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுநர் பேருந்தின் இயக்கத்தில், செல்போனை பார்த்தது அல்லது அதில் பேசுவது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக 29 நாட்கள் தற்காலிக பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்த, மண்டல வாரியான அதிகாரிகளுக்கும் போக்குவரத்த்துத்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.