Baby Delivery: வாட்ஸப்பில் குழு வைத்து வீட்டிலேயே பிரசவம்; விபரீதம் வேண்டாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
இவ்வாறான விபரீத செயல்களை கைவிட வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.
நவம்பர் 22, குன்றத்தூர் (Chennai News): திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 36). இவரின் மனைவி சுகன்யா (வயது 32). தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் தற்போது குன்றத்தூர் பகுதியில் தங்கி இருக்கிறார்கள். இதனிடையே, மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த சுகன்யா, கடந்த நவம்பர் 17ம் தேதி வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டு, ஆண் குழந்தையை பிரசவித்து இருக்கிறார். Trichy News: அனுதினமும் சித்ரவதை, டார்ச்சர்.. இளைஞரை கொன்ற மாமியார்-மருமகள்.. திருச்சியில் அதிரவைக்கும் சம்பவம்.!
வீட்டில் பிரசவம்:
இதனிடையே, தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போதிலும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விடாமல் மனோகரன் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த விசயசம் குறித்து அவர் வாட்சப் குழுவில் தகவலையும் பகிர்ந்துள்ளார். அந்த வாட்சப் குழுவுக்கு "வீட்டில் குழந்தை பெற்றோரின் அனுபவம்" எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் & சுகாதாரத்துறை எச்சரிக்கை:
இக்குழுவில் 1024 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், பிரசவமடைந்த பெண் மற்றும் அவரின் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். அதேபோல, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பிலும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.