Parangimalai Murder Case: பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சதிஷ் குற்றவாளி என அறிவிப்பு..!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, 20 வயது கல்லூரி மாணவி இரயில் முன் தள்ளவிடப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு டிச.30 அன்று வெளியாகிறது.
டிசம்பர் 27, அல்லிக்குளம் (Chennai News): சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவி சத்யா (வயது 20), கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். மாணவி தனது கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை இரயில் நிலையம் வந்திருந்த நிலையில், தாம்பரம் நோக்கி செல்லும் இரயில்முன் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டார். விசாரணையில், அவரை ஒருதலையாக காதலித்து வந்த சதிஷ் என்பவர், மாணவி தன்னிடம் பேசாததால் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி சார்பில் நடத்தப்பட்டது. மேலும், மகள் பலியான துக்கம் தாளாமல், அவரின் தந்தையும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். Krishnagiri Accident: ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றவர்களுக்கு சோகம்; ஓட்டுனர்களின் போட்டா-போட்டியால் 40 பேர் காயம்.!
குற்றம் உறுதி செய்யப்பட்டது, விரைவில் தண்டனை:
கடந்த 2022ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதறவைத்த குற்றச்செயலில், குற்றவாளி சதீஷுக்கு தற்போது வரை நீதிமன்றத்தின் சார்பில் ஜாமின் வழங்கப்படவில்லை. சிபிசிஐடி அதிகாரிகள் துரிதமான விசாரணையை முன்னெடுத்த நிலையில், இறுதி விசாரணையும் நிறைவுபெற்றது. மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கு, சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் 70 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் சதீஷ் குற்றவாளி என்பது உறுதி செய்யப்படவே, அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, வரும் டிச.30, 2024 அன்று தண்டனை தொடர்பான விபரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.