Family Dies in Accident: தாய்-தந்தை, மகன் என மூவர் விபத்தில் மரணம்; கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்த சோகம்.!

கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த வழியில், வனப்பகுதியில் விபத்தில் சிக்கி தாய்-தந்தை, மகன் என 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

நவம்பர் 08, தேன்கனிக்கோட்டை (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, ஜோகட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 40). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நாகராஜின் மனைவி ரத்தினம்மா. தம்பதிகளுக்கு நாகேஷ், நவீன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் நாகேஷ் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுவிட்டு, தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்:

இளையவன் நவீன் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று இவர்கள் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன்படி, நாகராஜ், தனது மனைவி ரத்தினம்மா, இளையமகன் நவீன் ஆகியோருடன் முத்துராயன்தொட்டி கிராமத்தில் இருக்கும் முத்தப்பா சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டு வர இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்களின் வாகனம் நெல்லுமார், அக்ரஹாரம் கிராமத்தில், அன்னெமார் தொட்டி கிராமத்தின் வனப்பகுதியில் சென்றது. Bike Ambulance: 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவு; மலைக்கிராம மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! 

அடுத்தடுத்து மூவரும் பலி:

அப்போது, இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. நொடியில் நடந்த விபத்தில், இவர்கள் மூவரும் படுகாயம் அடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், இவர்களை மீட்டு அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இவர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடும்பத்தில் மூவர் விபத்தில் மரணம்:

இந்த சம்பவம் அவர்களின் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரேநேரத்தில் தாய், தந்தை, தம்பி ஆகியோரை விபத்தில் இழந்த மூத்த மகன், ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதில் நாகராஜ், அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சோகம் ஜோகட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.