Illicit Affair Suicide: அன்பு மனைவி இருக்க கள்ளக்காதல் வாழ்க்கை; தேடி வந்த மனைவியால் விண்ணைத்தேடி பயணித்த கணவன்.!

கள்ளக்காதல் வயப்பட்ட கணவர் மனைவியின் அறிவுரைக்கு பின்னர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் சேலத்தில் நடந்துள்ளது.

Victim Manikandan | Suicide Death Hand File Pic (Photo Credit: @Sriramrpckanna1 X / Pixabay)

ஜூலை 20, எடப்பாடி (Salem News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் (Coonoor, Nilgiris), மகாலிங்கம் காலனியில் வசித்து வருபவர் ஜவஹர். இவரின் மகன் மணிகண்டன் (வயது 32). எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சிவரஞ்சனி. தம்பதிகள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, இருவருக்கும் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த வேறொரு (Illegal Affair) பெண்ணுடன் மணிகண்டனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த நபர்:

இந்த அறிமுகமானது பின்னாளில் இவர்களுக்கிடையேயான நட்பை அதிகரித்து, பின்னாளில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஒருகட்டத்திற்கு மேல் குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்த மணிகண்டன், கள்ளகாதலியுடன் வீட்டில் இருந்து வெளியேறி சேலம் சென்றுவிட்டார். Amonia Leak: மீன் பதன ஆலையில் அமோனியா வாயுக்கசிவு; 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. தூத்துக்குடியில் அதிர்ச்சி.! 

கணவரை தேடி அலைந்த மனைவி:

மணிகண்டனுடைய கள்ளகாதலியின் உறவினர்கள் சேலம் மாவட்டம், எடப்பாடி, வளையசெட்டியூர் பகுதியில் வசித்து வருகிறார்கள் என்பதால், இவர்களும் வளையசெட்டியூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையில் கணவர் குறித்து எந்த விதமான தகவலும் இல்லாத காரணத்தால், சிவரஞ்சனி தனது கணவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடி இருக்கிறார். இறுதியாக மணிகண்டன் சேலத்தில் இருக்கும் தகவல் அறிந்து சிவரஞ்சனி சேலம் சென்றுள்ளார்.

கணவரின் விபரீத செயல்:

கள்ளக்காதலியுடன் தனது கணவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேரில் சென்ற சிவரஞ்சனி, மணிகண்டனை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தையும் கண்டித்து இருக்கிறார். இதனால் வருந்தியவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்ற மணிகண்டன், பூலாம்பட்டி வாய்க்கால் கரையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு அருகில் விஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை:

அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்ய, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சேலத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பூலாம்பட்டி காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement