School Teacher Killed: அரசுப்பள்ளியில் ஆசிரியை கொலை., முதல்வர் இரங்கல் & ரூ.5 இலட்சம் நிதிஉதவி அறிவிப்பு.!
திருமண விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக, தமிழ் ஆசிரியை கொல்லப்பட்ட நிலையில், அவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், ரூ.5 இலட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
நவம்பர் 21, தலைமை செயலகம் (Chennai News): தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த முத்து என்பவரின் மகள் செல்வமணி (வயது 26), நேற்று காலை பள்ளி வளாகத்திலேயே மதன் குமார் என்ற நபரால் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். Breaking: வானிலை: நவ.26 & 27ம் தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
அமைச்சர்களின் நேரில் சென்று ஆறுதல்:
ஆசிரியை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், இது தொடர்பான விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உடனடியாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை பட்டுக்கோட்டைக்கு அனுப்பி இருந்தார்.
முதல்வர் உறுதி:
அவர்கள் உயிரிழந்த ஆசிரியை செல்வமணியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ஆசிரியை உடலுக்கு மாலை அணிவித்து இரங்கலை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினும், தனது சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொண்டார். மேலும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் அரசு சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.