Tirunelveli Court: நீதிமன்ற வாசலில் பயங்கரம்; 4 பேர் கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை..! திருநெல்வேலியில் கொடூரம்.!

பஞ்சாயத்து உறுப்பினர் 2023ல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

Tirunelveli Court | Victim Mayandi (Photo Credit: YouTube / @News18Tamilnadu X)

டிசம்பர் 20, பாளையங்கோட்டை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை (Nellai Court Campus Murder) நீதிமன்ற வளாகம், மாவட்டத்தின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு என்பது எப்போதும் இருக்கும். இதனிடையே, இன்று கீழநத்தம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் மாயாண்டி, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது, அவரை சுற்றிவளைத்த கும்பல், காரில் வந்து மாயாண்டியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தது. காவல்துறையினர், வழக்கறிஞர்கள் கண்முன் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் வாசலில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள், காவலர்கள் முன் படுகொலை:

இளைஞரை கொலை செய்த கும்பல் காரில் தப்பிச் சென்ற நிலையில், பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சம்பவம் நடந்தது உறுதியாகியுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் இந்த துயரம் நடந்துள்ளது. திருநெல்வேலி நீதிமன்றத்தில் நாளொன்றுக்கு 3,000 முதல் 5,000 பேர் வரை இருப்பார்கள். காவலர்கள், வழக்கறிஞர்கள், வழக்குக்கு வந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கும் இடத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒரேயொரு குற்றவாளி மட்டும் வழக்கறிஞர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உய்க்காட்டான் என்பவரால் பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். TN Govt Jobs: 10 வகுப்பு போதும்.. சத்துணவு துறையில் காலிப்பணியிடங்கள்; 8,997 பேருக்கு வேலைவாய்ப்பு.! 

4 பேர் கும்பல் கைது:

இந்த கொலை விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற பிற 3 நபர்களும் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை தொடருகிறது. நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவத்தை தடுக்க இயலாமல் பெரும்பாலான காவல்துறையினர் பதறியபடி திகைத்து நின்றுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி ராகுல் கிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். கேரளா பதிவெண் கொண்ட காரில் தப்பிச் சென்ற தங்க மகேஷ், சிவா, மனோகர் ராஜ் ஆகியோர் நெல்லை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பழிக்குப்பழியாக கொலை?

கடந்த 2023 ம் ஆண்டில் பஞ்சாயத்து உறுப்பினர் ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கில் மாயாண்டிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜாமணி உயிரிழந்து இன்று ஓராண்டு ஆகும் நிலையில், இன்று மாயாண்டியின் கொலை சம்பவம் நீதிமன்ற வாசலிலேயே நடந்துள்ளது என்பது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி விசாரணை நடைபெறுகிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif