Alien EMO Tattoo: நாக்கை அறுத்து, கண்களில் ஊசி செலுத்தி நிறம் பூசும் டாட்டூ; விசமத்தனமான செயலை மேற்கொண்ட 2 இளைஞர்கள் கைது.!

தொடர் கோரிக்கைகளுக்கு பின்னர், திருச்சி காவல்துறையினர் சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்தனர்.

Alien EMO Body Modification Cultre Trichy (Photo Credit: Instagram)

டிசம்பர் 17, மலைக்கோட்டை (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலசிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன் (வயது 24). இவர் மலைக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், "ஏலியன் ஈமோ டாட்டூ ஸ்டுடியோ (Alien EMO Tattoo Studio)" வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான இளைஞர்கள் வந்து டாட்டூ குத்திச் சென்றுள்ளனர். கண்களில் நிறம் பூசிக்கொண்டு, நாக்கை இரண்டாக அறுத்து வித்தை காண்பித்த ஹரிஹரன், அதனை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வரவேற்பு பெற்றுள்ளார்.

நாக்கை வெட்டி கலர் பூசி டாட்டூ:

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர். பின்தொடர்பாளர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்குச் சென்று, ரூ.2 இலட்சம் செலவில் அதற்கான படிப்பையும் கற்றுக்கொண்டுள்ளார். அதாவது, கண்களில் ஊசி செலுத்தி விழியை நிறம் மாற்றுதல், நாக்கின் நுனியை வெட்டி, இரண்டாக பிளந்து காட்டுதல், அதில் டாடா வரைதல் என உயிருக்கு ஆபத்தான டாட்டூ முறைகளை கையில் எடுத்து இருக்கிறார்.

மருத்துவரை போல அறுவை சிகிச்சை:

தன்னிடம் வரும் வாடிக்கையாளரிடம் பேசி, அவர்களையும் தன்னைப்போல மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இவரின் கடையில் வேலை பார்த்து வந்த, தனது நண்பரான கூத்தப்பாறை பகுதியில் வசித்து வரும் ஜெயராமன் (வயது 24) என்ற இளைஞருக்கும், கண்களில் ஊசி செலுத்தி விழி நிறத்தை மாற்றியுள்ளார். மேலும், நாக்கில் பிளவையும் ஏற்படுத்தி இருக்கிறார். மருத்துவரை போல அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. Tips for Women: வெளியூரில் தனியாக வசிக்கும் பெண்களா நீங்கள்? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.! 

வீடியோ வைரல் - குவிந்த கண்டனங்கள்:

இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பொதுவெளிகளில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து தன்னை பெரிய அதிபுத்திசாலித்தன ஆர்வலர் போலவும், ஏலியன் போன்ற தோற்றத்தை கெத்து என அடையாளப்படுத்துவது போலவும் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்தை குவித்தது. மேலும், சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சுகாதாரத்துறை, காவல்துறை நடவடிக்கை:

வீடியோ விவகாரம் ஸ்ரீரங்கம் சுகாதாரத்துறை ஆய்வாளர் கார்த்திகேயனின் கவனத்திற்கும், மாநகர காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதன்பின் மலைக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன், ஜெயராமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர், டாட்டூ கடைக்கு சீல் வைத்தனர். இவ்வாறான அதிமேதாவிகளையும் சில தனியார் அமைப்புகள் நேரில் அழைத்து, அவர்களின் செயலை பாராட்டி பரிசு கொடுக்கிறது. இதுபோன்ற சர்ச்சை செயல்களில் உயிரிழப்பு ஏற்பட்டால், பாராட்டி சான்றிதழ் தரும் நிர்வாகம் இரங்கல் கூட தெரிவிக்காத நிலையில், எதன் அடிப்படையில் இவ்வாறான செயல்கள் ஊக்குவிக்கப்படுகிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த சம்பவம் நினைவிருக்கா?

கடந்த 2016ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரான, திருச்சி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், இதேபோன்று ஹேர் ட்ரான்ஸ்பிளான்டேஷன் செய்தபோது உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபரீதம் வேண்டாம்:

முந்தைய காலங்களில் பிடித்தவர்களின் பெயரை நெஞ்சு, கைகளில் பச்சை குத்தியது நடந்தது. இன்றளவில் அவை டாட்டூ கலாச்சாரமாக மாறி, விதவிதமாக உடலில் வரைவது, உடல் முழுவதும் வரைவது என தொடருகிறது. அதன் ஒரு கட்டமாக நாக்கை அறுத்து, அதில் நிறம் பூசுவது நடக்கிறது. இவ்வாறான செயல்கள் சில நேரம் மரணத்தையும் ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது சாலச்சிறந்தது.

சுயமாக அறுவை சிகிச்சை செய்யும் இளைஞருக்கு எதிராக குவியும் கண்டனங்கள்:

சர்ச்சைக்குரிய செயலை மேற்கொள்ளும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வைக்கப்பட்ட கோரிக்கை காணொளி:

 

View this post on Instagram

 

A post shared by Just Hear Us | Recepie | History | Nature | Public interest (@the_chennai_foods_spot)

என் உடல், என் டாட்டூ என உரிமைக் குரல் எழுப்புவோர், அதனால் வரும் சாதக-பாதத்தை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்பதே நிதர்சனம்.