14-Year-Old Boy Dies: 14 வயது சிறுவனுக்கு, 14வது மாடியில் காத்திருந்த எமன்; பால்கனி விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்.!
பால்கனி பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிர் பறிபோன சோகம் நொய்டாவில் நடந்துள்ளது.
நவம்பர் 30, நொய்டா (Uttar Pradesh News): அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை பால்கனி பகுதியில் விளையாட அனுமதிக்க கூடாது என்பதற்கு உதாரணமாக ஒரு சோக சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது. 14 வயதாகும் சிறுவனின் விளையாட்டு வினையான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
7ம் வகுப்பு சிறுவன்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா, செக்டர் 1 பகுதியில் பாரமவுண்ட் எமோஷன்ஸ் ஹவுசிங் சொசைட்டி உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 18 மாடிகள் கொண்டவை ஆகும். இந்த அடுக்குமாடி குடியிப்பில், 14வது மாடியில் தனது பெற்றோருடன் 14 வயது பள்ளி மாணவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். Geyser Explodes: திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்? பாத்ரூமில் பரிதாபமாக பறிபோன உயிர்.!
14 வது மாடியில் இருந்து தவறி விழுந்து சோகம்:
சம்பவத்தன்று, வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் சிறுவன் தனது வீட்டின் பால்கனி பகுதியில் நின்று விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அப்போது, சிறுவன் எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்துள்ளார். சுமார் 14 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன், உடல் சிதறி பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை:
சிறுவனின் இறப்பு குறித்து தகவல் அறிந்த நொய்டா காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் தற்கொலை செய்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனை இழந்த அதிர்ச்சியில் பெற்றோர் இருப்பதால், மேற்படி விபரங்கள் சேகரிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.