TTF Vasan Driving License Cancelled: பைக் யூடியூபர் வாசனின் கைகளை கட்டிப்போட்ட உத்தரவு.. 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து.!
பல இலட்சங்களில் விற்பனை செய்யப்படும் விலைஉயர்ந்த வாகனங்களை வாங்கிய வாசன், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலும், தனக்கு எவ்வித பெருங்காயத்தை ஏற்படுத்தாத வகையிலான உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றையும் வாங்கினார்.
அக்டோபர் 07, சென்னை (Chennai News): யூடியூபில் பைக் தொடர்பான வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் வைகுந்தவாசன் என்ற டிடிஎப் வாசன் (வயது 23). தொடக்கத்தில் இருசக்கர வாகனத்தில் பிறர் கவனக்குறைவாக சென்றாலும், அவர்களை குறுக்கே மறித்து வாகனத்தை நிறுத்தி ஆலோசனை கூறிவிட்டு செல்வார்.
பின்னாட்களில், அவருக்கு தேவையான பொருளதவியை யூடியூப் வழங்க, பல இலட்சங்களில் விற்பனை செய்யப்படும் விலைஉயர்ந்த வாகனங்களை வாங்கிய வாசன், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலும், தனக்கு எவ்வித பெருங்காயத்தை ஏற்படுத்தாத வகையிலான உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றையும் வாங்கினார்.
பல இலட்சங்கள் முதலீடு செய்து, யூடியூப்-பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வருமானம் பார்த்து வந்த டிடிஎப் வாசனை பின்தொட
ர்ந்த பல இளம் தலைமுறையும், அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று அவருக்கு எதிராக வழக்குகளை பதியவைக்க காரணமாக இருந்தனர். Nigerian Escaped: நொடிப்பொழுதில் மும்பை காவலர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடிய நைஜீரிய இளைஞர்: போதைப்பொருள் கடத்தல் விசாரணையில் பகீர்.!
எனது தம்பிகள், தங்கங்கள் என கூட்டத்திற்கு ஆதராக குரல் கொடுத்து, அவர் ஆதரவாளர்கள் செய்த சேட்டையால் காவல் துறையினரிடம் புகாரை வாங்கி குவித்தவர், சமீபத்தில் மும்பையில் இருந்து சென்னை வரும்போது காஞ்சிபுரத்தில் வீலிங் செய்து, சென்னையில் விபத்தில் சிக்கி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கீழமை நீதிமன்றத்தில் ஜாமினுக்கு விண்ணப்பித்தும் பலனில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை அப்பாவியாக பாவித்து ஜாமின் கேட்ட நிலையில், "விபத்தை ஏற்படுத்திய டிடிஎப் வாசனின் பைக்கை கொளுத்துங்கள். அவரால் பல சிறார்கள் வாகனத்தில் அதிவேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்துகிறார்கள்.
பலரும் திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர், 06.10.2023 முதல் 05.10.2033 வரையில் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதனால் டிடிஎப் வாசன் இனிவரும் நாட்களில், சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானாலும் வாகனத்தை இயக்க முடியாது. பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தி, அலட்சியமாக வாகனங்களை விதிமுறைக்கு மாறாக இயக்கிய குற்றத்திற்காக டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.