TN Govt Bus: வார இறுதியில் சொந்த ஊர் போறிங்களா?.. அசத்தல் குட் நியூஸ் இதுதான்..! விபரம் இதோ.!

மாதவாரத்தில் இருந்து 20 பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும் நாளைய தினத்தில் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SETC Bus (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஆகஸ்ட் 09, சென்னை (Chennai News): தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருவோர், வார இறுதியான வெள்ளிக்கிழமை மாலை முதல் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று, பின் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணியிடங்களுக்கு திரும்புவார்கள். இதனால் சொந்த ஊர் சென்று வரும் பயணிகளின் நலனுக்காக சிறப்பு பேருந்துகளும் (Special Bus) அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. TN Weather Update: காலை 10 மணிவரையில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

315 சிறப்பு பேருந்துகள்:

இந்நிலையில், இந்த வாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் (Kilambakkam Bus Stand) பேருந்து நிறுத்தத்தில் இருந்து 275 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. நாளை 315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இன்று மற்றும் நாளை தலா 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

200 சிறப்பு பேருந்துகள்:

அதேவேளையில், பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வோருக்கு எதுவாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் மக்களின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் (Madavaram) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 20 பேருந்துகளில் சிறப்பு பேரூந்துகளாவும் அறிவிக்கப்படுகின்றன.