Lightning Like St. Elmo’s Fire: நொடிக்குள் இவ்வுளவு பலமான மின்னல் தாக்குதல்; விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வைரல்.!
நேற்று புளோரிடாவை புரட்டியெடுத்த புயலின் சீற்றத்தால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 31, வைரல் (Trending Video): அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா, கரோலினா, புளோரிடா பகுதிகளை 205 கி.மீ வேகத்தில் தாக்கிய இடலியா புயல் காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் .
நேற்று புளோரிடாவை புரட்டியெடுத்த புயலின் சீற்றத்தால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயலின் வேகம் மக்கள் நினைத்ததைவிட பன்மடங்கு அதிகம் இருந்தால், சேதங்கள் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. Tornado Flips Car: 125 கி.மீ வேகத்தில் வீசிய அதிவேக புயல்; காரை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்துப்போட்ட பகீர் சம்பவம்.!
இந்நிலையில், மீட்பு படையில் ஈடுபட்ட அதிகாரிகள் விமானத்தில் பயணிக்கும்போது, மின்னல் கீற்றுகள் நொடிக்கும் குறைவான நேரத்தில் பல இடங்களை தொடர்ந்து தாக்கிய அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி இருக்கிறது.
KC 135 விமானத்தில் இருந்த விமானிகள், இடலியா புயல் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அப்போது, புயலுக்கு நெடுந்தொலைவில் அதிகாரிகள் பயணித்தபோது, St. Elmo Fire என்று அழைக்கப்படும் விளைவை போல மின்னல் கீற்றுகள் கண்களை பறித்தன.
அதேபோல், இந்தியாவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மின்னல் கீற்றுகளின் கண்கவர் காட்சியை ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.