World Deadliest Wars: அதிக இறப்பு, பேரழிவுகளை கொண்ட உலகளவிலான போர்களில் முக்கியமான 5 எவை?.. தெரிஞ்சிக்கோங்க., ஆச்சரியப்பட்டு போவீங்க.!
போர்கள் என்றாலே இறப்புகள், அழிவுகள் இருக்கும் என்பது இயல்பானது தான்.
டிசம்பர், 10: உலகளவில் பல போர்கள் (Wars on Empire) நடைபெற்று இருக்கின்றன. அவற்றில் வரலாற்றில் குறிப்பிடும் அளவு கடுமையான விளைவை சந்தித்த போர்களில் சில முக்கியத்துவம் பெறுகிறது. போர்கள் (Wars) என்றாலே இறப்புகள், அழிவுகள் இருக்கும் என்பது இயல்பானது தான். ஆனால், உலகையே திகைக்க வகைக்கும் அளவில் மில்லியன் கணக்கில் மக்களை இழந்த விஷயங்களால் அவை முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டாம் உலகப்போர் (World War-II): உலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றாலும், அவற்றில் கவனிக்கத்தக்கது முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் போன்றவை ஆகும். கடந்த 1939 - 1945 ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாம் உலக போர் வரலாற்றில் பதிவு செய்யப்படும் அளவு பல மில்லியன் இறப்புகளை கொண்டது.
ஏனெனில், இரண்டாம் உலகப்போரில் 56.4 மில்லியன் மக்கள் உயிரிழந்தார்கள். சோவியத் ரஷியாவில் 26.6 மில்லியன் மக்கள், சீனாவில் 7.8 மில்லியன் மக்கள் உயிரிழந்தார்கள். மக்கள் தொகையில் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் போலந்து கடுமையான சேதத்தினை சந்தித்தது.
இரண்டாம் சினோ-ஜப்பானிய போர் (Second Sino-Japanese War): கடந்த 1937 - 1945 ஆண்டுகளுக்கு இடையே சீனாவிற்கும் - ஜப்பானிய இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரில் 25 மில்லியன் பொதுமக்கள், 4 மில்லியன் சீன ஜப்பானிய படைவீரர்கள் உயிரிழந்தனர். வரலாற்றில் அதிக இழப்புகளை கொண்ட போரில் சினோ-ஜப்பானிய போர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. Spy Camera Alert: உங்களின் அறையில் ரகசிய கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவது எப்படி?.. உஷார் பெண்களே..!
மிங் பேரரசு - குயிங் பேரரசு போர் (Ming Qing Dynasty War): 16ம் நூற்றாண்டில் 1618 - 1683ம் ஆண்டுகளுக்கு இடையே, மிங் - குயிங் பேரரசுக்கு இடையே சீனாவில் நடைபெற்ற போரில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். வடகிழக்கு சீனாவில் நடைபெற்ற இப்போர் அங்கு வரலாற்றில் அதிக அழிவுகளை கொண்ட போர்களில் ஒன்றாக இருக்கிறது. இது சீனாவின் மிகப்பெரிய போர்களில் முக்கியமான ஒன்றாகவும் இருக்கிறது.
தைப்பிங் கிளர்ச்சி (Taiping Rebellion War): சீன வரலாற்றில் தைப்பிங் கிளர்ச்சி என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 18ம் நூற்றாண்டில் 1850 - 1864 ஆண்டுகளுக்கு இடையே குயிங் பேரரசுக்கும் - கிறிஸ்துவ மிஷினரிய குழுவிற்கும் இடையே தைப்பிங் கிளர்ச்சிக்கு பின்னர் நடந்த போரில் 20 - 30 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். இது சீனாவின் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய போராகவும் கருதப்படுகிறது.