Smallest Countries World: உலகளவில் மிகச்சிறிய நாடுகள் எது தெரியுமா?.. தீவுகள் முதல் மலைப்பிரதேசங்கள் வரை அமைந்துள்ள சிறிய நாடுகள்.!

இவற்றில் அளவில் பெரியது, மக்கள் தொகையில் பெரியது, வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், பொருளாதாரத்தில் மந்தமான நாடுகள் என பலவகையாக அவை பிரிக்கப்பட்டுள்ளன.

Representative: Island

டிசம்பர், 10: உலகம் கண்டங்களாகவும் (World), கண்டங்கள் நாடுகளாகவும், நாடுகள் பிராந்தியங்கள்/மாநிலங்களாகவும், மாநிலங்கள் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உலகளவில் 200க்கும் அதிகமான நாடுகள் உள்ளன. இவற்றில் அளவில் பெரியது, மக்கள் தொகையில் பெரியது, வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், பொருளாதாரத்தில் மந்தமான நாடுகள் என பலவகையாக அவை பிரிக்கப்பட்டுள்ளன.

இன்றளவில் நாடுகள் பரப்பளவு, படைபலம், பொருளாதார சக்தி போன்ற பல காரணிகளில் தங்களை வலிமைமிக்க நாடுகளாக காண்பித்துக்கொள்கின்றன. அந்த வகையில், உலகில் சிறிய நாடுகள் எவை? (World Smallest Countries) அதன் அளவு மற்றும் மக்கள் தொகை எவ்வுளவு? என்பது தொடர்பான விபரங்களை இன்று காணலாம்.

வாடிகன் சிட்டி (Vatican City): இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு அருகே இருக்கும் உலகின் மிகச்சிறிய முதல் நாடு வாடிகன் நகரம். இங்கு தான் ரோமன் கத்தோலிக் தேவாலயம் அமைந்துள்ளது. இது அம்மார்கத்தினரால் புனித தலமாகவும் கருதப்படுகிறது. இந்நாடு 44 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. 800 க்கும் அதிகமான மக்கள் அங்கு வசித்து வருகிறார்கள்.

Vatican City

மொனாகோ (Monaco): மேற்கு ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டுக்கு அருகே அமைந்துள்ள உலகின் இரண்டாவது மிகச்சிறிய நகரம் மொனாகோ. இந்நாடு 202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள். Baby Care: குழந்தை பராமரிப்பில் தப்பி தவறியும் இதனை செஞ்சிடாதீங்க.. தாய்மார்களே கவனமாக இருங்க.! 

நவ்ரு (Nauru): வடகிழக்கு ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது சிறிய நாடு நவ்ரூ. வெண்ணிற கடற்கரை, பனைமரத்தின் அழகு என அத்தீவு கூட்டம் எழிலுடன் காணப்படும். இந்நாடு 21 சதுர கி.மீ அளவில் அமைந்துள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

Nauru Country Map

துவலூ (Tuvalu): தெற்கு பசுபிக் கடல் பகுதியில் 9 தீவுக்கூட்டத்தை தன்னகத்தே கொண்டு தனி நாடாக இருந்து வருவது துவலூ. இந்த தீவு கூட்டங்களில் மொத்தமாக 11 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

சான் மரினோ (San Marino): வடக்கு இத்தாலியில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள சான் மரினோ நாடு, உலகளவில் வரலாறுகளை கொண்டு எஞ்சியுள்ள நாடு ஆகும். இந்நாடு 61.2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 34 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 06:55 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif