Best Director 96th Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலன்: சிறந்த இயக்குனராக தேர்வு.!
கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன் தேர்வு செய்யப்பட்டார்.
மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், ஹாலிவுட், டால்பி திரையரங்கில் வைத்து 2024ம் ஆண்டுக்கான 96வது (96th Oscars Award)ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓபன் ஹெய்மர், பார்பி, புவர் திங்ஸ், காட்ஸில்லா மைனஸ் ஒன் உட்பட பல படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றன. உக்ரைன் - ரஷியா போரினை அடிப்படையாக கொண்டு உருவாகிய 20 டேஸ் இன் மரியுபோல் என்ற குறும்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது. இந்நிலையில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஓபன் ஹெய்மர் படத்தை இயக்கி வழங்கி இருந்தார்.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)